![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Range_trumpet.svg/langta-640px-Range_trumpet.svg.png&w=640&q=50)
ஊதுகொம்பு
From Wikipedia, the free encyclopedia
ஊதுகொம்பு (trumpet) என்பது மேல் ஸ்தாயி ஒலியைக் கொடுக்கும் ஒரு காற்றுவகை இசைக்கருவி. இது மிகப் பழைய இசைக்கருவிகளுள் ஒன்று. கிமு 1500 களுக்கு முன்பிருந்தே இக்கருவி பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது. ஊதுகொம்பு போன்ற வாசிப்பு வரலாற்று போர்கள் அல்லது வேட்டையில் சமிக்ஞை சாதனங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இசைக்கருவிகள் வாசித்தலுக்காக பயன்படுத்தினர். [1] இது நீள் வளைய வடிவில் சுற்றப்பட்ட பித்தளைக் குழாயால் ஆனது. குழாயின் ஒரு முனையில் வாயால் ஊதுவதன் மூலம் உள்ளேயுள்ள வளி அதிர்ந்து ஒலி உண்டாகிறது. [2]
![]() ஊதுகொம்பு | |
பித்தளை இசைக்கருவி | |
---|---|
வகைப்பாடு | பித்தளை
|
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை | 423.233 (வால்வுகள் கொண்டு ஊதப்படும் காற்றிசைக் கருவி வகை) |
வரிசை | |
தொடர்புள்ள கருவிகள் | |
Flugelhorn,சிற்றூதுகொம்பு ,பக்கிள் கருவி, |
ஊதுகொம்பில் பல வகைகள் உண்டு. முற்கால ஊதுகொம்புகளில் வால்வுகள் இருக்கவில்லை. தற்கால ஊதுகொம்புகள், ஆடுதண்டு வால்வுகள் அல்லது சுழல் வால்வுகளைக் கொண்டுள்ளன. இவற்றை இயக்குவதனால் குழாயின் நீளத்தைக் கூட்ட முடியும். இது உண்டாகும் ஒலியின் சுருதியைக் குறைக்கிறது.
ஊதுகொம்பு செந்நெறி இசை, ஜாஸ் போன்ற பல இசை வகைகளில் பயன்படுகின்றது. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங், மைல்ஸ் டேவிஸ், டிஸ்சி கில்லெஸ்பி, பிக்ஸ் பீடெர்பெக், கிளிபோர்ட் பிரவுண், லீ மோர்கன், பிரடீ ஹப்பார்ட், செட் பேக்கர், மேனார்ட் பெர்கூசன் போன்றோர் புகழ் பெற்ற ஊதுகொம்பு இசைக் கலைஞர்களுள் அடங்குவர்.