உஸ்மானாபாத் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
உஸ்மானாபாத் மாவட்டம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் உள்ளது. இது அவுரங்காபாத் மண்டலத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் உஸ்மானாபாத் நகரில் உள்ளது. புகழ் பெற்ற துளஜாபவானி கோயில் இந்த மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 7569 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [2] இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் அமைந்துள்ளன. தாராசிவா குகைகள் இம்மலைகளில் உள்ளது.
Osmanabad District உஸ்மானாபாத்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
-18.40°N 76.40°E | |
---|---|
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அவுரங்காபாத் கோட்டம் |
தலைமையகம் | உஸ்மானாபாத் |
பரப்பு | 7,569 km2 (2,922 sq mi) |
மக்கட்தொகை | 1660311 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 219.0/km2 (567/sq mi) |
படிப்பறிவு | 76.33% |
பாலின விகிதம் | 920 |
வட்டங்கள் | 1. உஸ்மானாபாத் 2. துளஜாபூர் 3. உமர்கா, 4. லோஹாரா 5. களம்பு 6. பூம் 7. பராண்டா 8. வாசி |
மக்களவைத்தொகுதிகள் | உஸ்மானாபாத்[1] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 9, தேசிய நெடுஞ்சாலை 211 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 730 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். [3]
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 1,660,311 மக்கள் வாழ்ந்தனர். [2]
இந்த மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்குள் 219 பேர் வாழ்வதாக மக்கள் அடர்த்தி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. [2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 920 பெண்கள் இருப்பதாக பால் விகிதக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. [2] இங்கு வாழ்வோரில் கல்வியறிவை 76.33% பேர் பெற்றுள்ளனர்.[2]
சிவ சேனா , காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகியன இங்குள்ள பெரிய கட்சிகள் [4][5]
இந்த மாவட்டத்தை பாராளுமன்றத்தில் முன்னிறுத்துபவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [6]
இந்த மாவட்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம். இங்கு ரயில் நிலையங்களும் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.