![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/88/Lake_urmia_1984.jpg/640px-Lake_urmia_1984.jpg&w=640&q=50)
உருமியா ஏரி
ஈரானின் உப்பு ஏரி / From Wikipedia, the free encyclopedia
உருமியா ஏரி (பாரசீக: دریاچه ارومیه, தாரியாசே-யே உருமியே) ஈரானில் உள்ள நீர்வெளியேற்றுப் பாதையில்லா ஒரு உப்பு ஏரி.[2][3] இந்த ஏரி ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணங்களுக்கிடையில், காஸ்பியன் கடலின் தென்பகுதியின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 5,200 சதுர கிமீ (2,000 சதுர மைல்), நீளம் 140 கிமீ (87 மைல்), அகலம் 55 கிமீ (34 மைல்), மற்றும் அதிகபட்ச ஆழம் 16 மீ (52 அடி). இந்த ஏரி முழு அளவாக இருந்தபோது மையக்கிழக்கின் மிகப்பெரிய ஏரியாகவும், பூமியின் ஆறாவது பெரிய உப்பு நீர் ஏரியாகவும் இருந்தது. இந்த ஏரியில் பாயும் ஆறுகள் அணைகளால் தடுக்கப்படுவதாலும், சுற்றியுள்ள பகுதியிலிருந்து நிலத்தடி நீர் பெருமளவில் எடுக்கப்படுவதாலும் அதன் முந்தைய அளவிலிருந்து 10% ஆக சுருங்கிவிட்டது.
உருமியா ஏரி | |
---|---|
![]() வின்வெளியிலிருந்து ஏரி உருமியா 1984-ல் | |
ஆள்கூறுகள் | 37°42′N 45°19′E |
வகை | உப்புநீர் ஏரி |
முதன்மை வெளியேற்றம் | இல்லை ஆவியாதல் மூலமாக மட்டுமே நீர் வெளியேறுகின்றது |
வடிநில நாடுகள் | ஈரான் |
அதிகபட்ச நீளம் | 140 km (87 mi) |
அதிகபட்ச அகலம் | 55 km (34 mi) |
மேற்பரப்பளவு | 5,200 km2 (2,000 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 16 m (52 அடி) |
உவர்ப்புத் தன்மை | 217–235 g L−1 Na–(Mg)–Cl–(SO4) உப்பு 8–11% வசந்தகாலம், 26-28% பின்குளிர்காலம்[1] |
Islands | 102 |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Lake_Urmia_Shrinkage.png/320px-Lake_Urmia_Shrinkage.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f9/Urmia_Lake.jpg/640px-Urmia_Lake.jpg)
![உருமியா ஏரி இரவில், மேற்கு அஜர்பைஜான், ஈரான்](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/LakeUrmia_SolmazDaryani00001.jpg/640px-LakeUrmia_SolmazDaryani00001.jpg)
![உருமியா ஏரி](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7b/LakeUrmia_SolmazDaryani.jpg/640px-LakeUrmia_SolmazDaryani.jpg)
உருமியா ஏரி அதிலுள்ள சுமார் 102 தீவுகளடன் ஈரானிய சுற்றுச்சூழல் துறையால் ஒரு தேசியப் பூங்காவாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது.[4]