ஐரோப்பாவின் ஆறாவது பெரிய நாடான உக்ரைனில் வாழும் கிழக்கு சிலாவிய மொழிகளைப் பேசுவோர் உக்ரைனியர் எனப்படுவர். இவர்களில் பெரும்பான்மையினர் உக்ரைனில் வாழ்ந்தாலும், குறிப்பிடத்தக்க அளவினர் அண்டை நாடுகளான உருசியா, செருமனி, போலந்து, செர்பியா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். இவர்களின் தாய்மொழி உக்குரைனிய மொழி ஆகும்.

விரைவான உண்மைகள் உக்ரைனியர்கள் (українці/ukrayintsi), மொத்த மக்கள் தொகை ...
உக்ரைனியர்கள்
(українці/ukrayintsi)
மொத்த மக்கள் தொகை

39.8[1]–57.5[2][3] million

குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்ட இடங்கள்
 உக்ரைன் 37,541,693[4]
 உருசியா1,927,988[5]
 கனடா1,209,085[6][7]
 ஐக்கிய அமெரிக்கா961,113[6][8]
 பிரேசில்500,000[6][9]
 மல்தோவா375,000[6][10]
 கசக்கஸ்தான்313,698(2012) [11]
 இத்தாலி320,070[சான்று தேவை]
 போலந்து49,000 (2011)[12] 300,000 [சான்று தேவை]
 அர்கெந்தீனா300,000[6][13]
 பெலருஸ்159,000[14]
 உஸ்பெகிஸ்தான்104,720 – 128,100[6][15][16]
 செக் குடியரசு126,613[6][17]
 போர்த்துகல்52,293[18]
 உருமேனியா51,703[19]
 லாத்வியா45,699[20]
 அசர்பைஜான்30,000[21]
 சிரியா27,878[சான்று தேவை]
 எசுத்தோனியா27,530[22]
 கிர்கிசுத்தான்21,924[23]
 லித்துவேனியா21,100[24]
 கிரேக்க நாடு19,785[25]
 சியார்சியா7,039[26]
 டென்மார்க்6,795[27]
 ஆர்மீனியா6,125[28]
 செர்பியா5,354[29]
 பல்கேரியா2,489[30]
மொழிகள்
உக்ரைனியம்[31][32][33]
மதங்கள்

ராசும்கோவ் மைய ஆய்வுப்படி உக்ரைன் சமயக் கணிப்பு (2006):

மொத்த மக்கள் தொகையில்:

சமயம் சாராதவர்கள், இறைமறுப்பாளர்கள், மதப்பிரிவு சாராதோர்62.5%
சமயம் சார்ந்தோர், மதப்பிரிவு சார்ந்தோர்37.5%
சமய நம்பிக்கையுள்ளோர் தொகையில்:
உக்ரைன் மரபுவழிச் சபை (கீவ் குலமுதுவர் சபையகம்)38.9%;
உக்ரைன் மரபுவழிச் சபை (மாசுக்கோ குலமுதுவர் சபையகம்)29.4%;
உக்ரைன் தனிவகை மரபுவழிச் சபை2.9%;
கிரேக்க கத்தோலிக்கம்14.7%;
உரோமன் கத்தோலிக்கம்1.7%;
புரட்டஸ்தாந்தம்2.4%;
பிற சமயங்கள்2.9%;

சமயம் தெரியாது என்போர்7.0%;
மூடு

உக்ரைனியர்கள் என்பது உக்குரைனிய மொழி பேசும் அனைவரையும் குறிக்கும் என்றாலும், உக்ரைனில் வாழும் பிற மொழியினரையும் சில வேளைகளில் இச்சொல் குறிக்கும்.[34] பெலாருசியர்களும், உருசியர்களும் இவர்களுடன் நெருங்கிய இனத்தவர்கள் ஆவர். உக்ரைனியர்கள் என்ற பெயரே இருபதாம் நூற்றாண்டில் வழங்கப்படுவதுதான். முன்னர் இவர்கள் ருசி, ருசிச்சி என்றும் அழைக்கப்பட்டனர். (முன்பு இவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பான ருசு என்னும் பகுதியின்மூலம் இப்பெயர் பெற்றனர்.) [35][36] இன்றைக்கு குறிப்பிடத்தக்க உக்ரைனியர்கள் உருசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரசில், கசகசுத்தான், இத்தாலி, அர்கெந்தீனா ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.[37] சில தகவல்மூலங்கள் கூறும் கணக்கின்படி, உக்ரைனுக்கு வெளியே ஏறத்தாழ இருபது மில்லியன் மக்கள் உக்ரைனியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டனராம்.[3][38][39]. இருப்பினும், அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் பத்து மில்லியன் மக்கள் உக்ரைனியர்கள் எனத் தெரிய வந்துள்ளது. உலகில் பரந்து வாழும் மக்களுள் உக்ரைனியர்களும் அடங்குவர்.

புவியில் பரம்பல்

Thumb
"உக்ரைனில் மக்கள் பரம்பல்" சிவப்பில் உள்ள பகுதிகளில் உக்ரைனியர்கள் வாழ்கிறார்கள்.

உக்ரைனியர்கள் பலர் உக்ரைனில் தான் வாழ்கிறார்கள். உக்கிரனில் மூன்றில் ஒருவர் உக்ரைனிய மொழி பேசுபவர். உக்ரைனுக்கு அடுத்தபடியாக அதிகம் வாழும் நாடு உருசியா.[5]

உருசியக் குடிமக்கள் பலர் தங்களை உக்ரைனியர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பலரின் முன்னோர் உக்ரைனியர்கள் ஆவர். [40]

சில கருதுகோள்களின்படி, வட அமெரிக்காவில் 2.1 மில்லியன் மக்களும், பிரசிலில் 5,00,000 மக்களும், மோல்டோவாவில் 3,75,000 மக்களும், கசகசுத்தானில் 333,000 மக்களும் போலந்தில் 3,50,000 மக்களும், அர்கெந்தீனாவில் 3,00,000 மக்களும் உக்ரைனியர்களாக வாழ்கின்றனர்.[13] மேலும் பெலாருசு, போர்த்துகல், ரோமானியா, சுலோவாக்கியா, ஐக்கிய ராச்சியம், ஆஸ்திரேலியா, செருமனி, லத்வியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, அயர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவினர் வாழ்கின்றனர்.

Thumb
கிழக்கு சிலாவிய இனக்குழுக்கள் வாழ்ந்த ஐரோப்பியப் பகுதிகள்

வரலாற்றின் கணக்கில் நோக்குங்கால், உக்ரைனியர்கள், பெலாருசியர்கள், உருசியர்கள் ஆகியோருடன் மொழித் தொடர்பைக் கொண்டிருந்தனர். கர்பதீனிய மலைத்தொடரிலிந்து வெள்ளைக் கடல் வரையிலும் ஒரே மக்கள் வாழ்ந்ததாகவும், இவர்களே பின்னர் உருசியர்கள், பெலாருசியர்கள் எனவும் பிரிந்து சென்றனர்.[41]

சமயங்கள்

சமய நம்பிக்கையுள்ளவர்களில் பெரும்பான்மையினர் கிறித்தவ சமய உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் ஆர்த்தோடாக்சு கிறித்தவர்கள் ஆவர். கீவ் மற்றும் மசுக்கோ பேற்றியார்க்கைச் சேர்ந்த தேவாலயங்கள் அதிகளவில் உள்ளன. ப்ரொடெசுட்டாண்டு, கிரேக்கக் கத்தோலிக்கம் ஆகிய உட்பிரிவுகளைப் பின்பற்றுவோரும் உள்ளனர். [42] யூதம், இசுலாம் ஆகிய சமயங்களைப் பின்பற்றும் சிறுபான்மையினரும் இங்கு வாழ்கின்றனர்.

நடனம்

உக்ரைனிய நாட்டுப்புறத்தவரின் நடனமே உக்ரைனிய நடனமாகக் கூறப்படுகிறது. கச்சேரிகளில் இவ்வகை நடனங்கள் ஆடப்பெற்றன. உக்ரைனிய நாட்டுப்புறக்கலைகள் இன்றளவும் நிலைத்திருக்கின்றன. உக்ரைனிய நடனம் எழுச்சி மிக்கதாவும், சுறுசுறுப்பானதாகவும், மகிழ்ச்சிமிக்கதாகவும் இருக்கும் என்பதால், உலகெங்கும் பரவலாக அறியப்படுகிறது.

உக்ரைன் வரலாற்றுப் பகுதிகள்

உக்ரைனின் பெரும்பகுதிகள் ஐரோப்பாவில் அமைந்துள்ளன. சில ஆண்டுகள் உக்ரைனியப் பகுதிகள் பல அண்டை நாடுகளினால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன.

மேலும் பார்க்கவும்

விரைவான உண்மைகள்
மூடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.