![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Time_Zones_of_the_Middle_East.svg/langta-640px-Time_Zones_of_the_Middle_East.svg.png&w=640&q=50)
ஈரானிய சீர் நேரம்
ஈரான் நாட்டின் நேர வலயம் / From Wikipedia, the free encyclopedia
ஈரானிய சீர் நேரம் (Iran Standard Time) அல்லது ஈரானிய நேரம் (Iran Time) என்பது ஈரானில் பின்பற்றப்படும் நேர வலயம் ஆகும். ஈரான் ஒசநே+03:30 என்ற நேர அலகைப் பயன்படுத்துகிறது. இது 52.5 பாகை கிழக்கு நெடுவரையால் வரையறுக்கப்படுகிறது. இரானிய நாட்காட்டியை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் நெடுவரையும் இதுவே ஆகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Time_Zones_of_the_Middle_East.svg/320px-Time_Zones_of_the_Middle_East.svg.png)
ஒசநே+02:00 | எகிப்திய சீர்நேரம் | |
ஒசநே+02:00 ஒசநே+03:00 |
கிழக்கு ஐரோப்பிய நேரம் / இசுரேலிய சீர்நேரம் / பலத்தீனிய சீர்நேரம் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் / இசுரேலிய கோடை நேரம் / பலத்தீனிய கோடை நேரம் | |
ஒசநே+03:00 | அராபிய சீர்நேரம் / துருக்கிய நேரம் | |
ஒசநே+03:30 | ஈரானிய சீர் நேரம் | |
ஒசநே+04:00 | பாரசீக வளைகுடா சீர்நேரம் |
▉ பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிப்பு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/Time_Zones_of_the_Middle_East.svg/320px-Time_Zones_of_the_Middle_East.svg.png)
அரசுத்தலைவர் மகுமூத் அகமதிநெச்சாத்தின் ஆணைப்படி, 2005 இற்கும் 2008 இற்கும் இடையில் ஈரான் பகலொளி சேமிப்பு நேரத்தை கடைப்பிடிக்கவில்லை.[1] பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே+04:30) 2008 மார்ச் 21 முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், 2022 செப்டம்பர் 21 முதல் ஈரான் ஆண்டு முழுவதும் நிலையான நேரத்தைக் (ஒசநே+03:30) கடைபிடிக்கிறது.[2][3]