இலாண்சூ (Lanzhou) வடமேற்கு சீனாவிலுள்ள கான்சு மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும்.[4] மஞ்சளாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த மாவட்டநிலை நகரம் முக்கியமான வட்டார போக்குவரத்து மையமாகும். தொலை வடக்குப் பகுதிகளை நாட்டின் கிழக்கு பாதியுடன் தொடர்வண்டியால் இணைக்கிறது. காலக்கோட்டில், வட பட்டுச் சாலையின் முதன்மை இணைப்பிடமாக விளங்கியது. இந்நகரம் கனரகத் தொழிற்சாலைகளுக்கும் பெட்ரோலிய வேதித் தொழிற்சாலைகளுக்கும் மையமாக விளங்குகின்றது. தொழிலக மாசுபாட்டாலும் குறுகலான ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதாலும் உலகில் மிகவும் மோசமான காற்றுத் தரம் கொண்டதாக இலாண்சூ இருந்தது. அரசு எடுத்துள்ள முயற்சிகளால், 2015இல் சீனாவின் மிக முன்னேறிய வானிலை உள்ள நகரமாக விருது பெற்றுள்ளது.
மேலதிகத் தகவல்கள் இலாண்சூ 兰州市, நாடு ...
இலாண்சூ | ![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Lanzhou_%28Chinese_characters%29.svg/220px-Lanzhou_%28Chinese_characters%29.svg.png) "லாண்சூ" எளிய (மேல்) மற்றும் மரபுச் (கீழ்) சீன எழுத்துருக்களில் | நவீன சீனம் | 兰州 |
---|
பண்டைய சீனம் | 蘭州 |
---|
Postal | லாண்சௌ |
---|
Literal meaning | "Orchid [Hills] Prefecture"[3] |
---|
|
|
மூடு
2010 கணக்கெடுப்பின்படி 3,616,163 மக்கள்தொகை கொண்டுள்ள இலாண்சூவின் 1,088 ச.கிமீ (420 சது மை) பரப்பளவுள்ள நகரியப் பகுதியில் 2,177,130 மக்கள் வாழ்கின்றனர்.[5] 2018இல் 298 square kilometres (115 சது மை) பரப்புள்ள மையப்பகுதியின் மக்கள்தொகை 2,890,000 ஆக உயர்ந்துள்ளது.[1]