இராபின்சுவில் நகரியம் (Robbinsville Township) ஐக்கிய அமெரிக்காவில் நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியில் உள்ள நகரியமாகும். 2010ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரியத்தின் மக்கள்தொகை 13,642 ஆகும்.[7][8][9] 2000ஆம் ஆண்டில் 10,275 ஆக இருந்த மக்கள்தொகை +32.8% வளர்ந்துள்ளது. 1990இலிருந்து (5815) 2000 வரை +76.7% உயர்ந்துள்ளது.[18] இந்த நகரியம் இப்பகுதியில் வாழ்ந்திருந்த ஜார்ஜ் ஆர். ராபின்சு நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[19]

விரைவான உண்மைகள் இராபின்சுவில் நகரியம், நியூ செர்சி, நாடு ...
இராபின்சுவில் நகரியம், நியூ செர்சி
நகரியம்
இராபின்சுவில் நகரியம்
Thumb
நியூ செர்சி நெடுஞ்சாலை 33ஐ ஒட்டிய இராபின்சுவில் நகர மையம்
Thumb
மெர்சர் கவுன்ட்டியில் இராபின்சுவில்லின் அமைவிடம் காட்டப்பட்டுள்ளது. உள்படம்: நியூ செர்சி மாநிலத்தில் மெர்சர் கவுன்ட்டியின் அமைவிடம் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
Thumb
வாசிங்டன் நகரியம், மெர்சர் கவுன்ட்டி, நியூ செர்சியின் கணக்கெடுப்பு வாரிய நிலப்படம் (தற்போது இராபின்சுவில் நகரியமாக அறியப்படுகின்றது)
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ செர்சி
கவுன்ட்டிமெர்சர்
நிறுவப்பட்டதுவாசிங்டன் நகரியமாக மார்ச் 15, 1859
மறுபெயரிடப்பட்டதுஇராபின்சுவில் நகரியமாக சனவரி 1, 2008
பெயர்ச்சூட்டுஜார்ஜ் ஆர். ராபின்சு
அரசு
  வகைமேயர்-நகரமன்றம்
  நிர்வாகம்நகரிய மன்றம்
  மேயர்டேவிட் பிரைடு (பதவிக்காலம் திசம்பர் 31, 2017)[3]
  நிர்வாகம்ஜாய் டோசி[4]
பரப்பளவு
  மொத்தம்20.491 sq mi (53.072 km2)
  நிலம்20.316 sq mi (52.618 km2)
  நீர்0.175 sq mi (0.454 km2)  0.86%
  பரப்பளவு தரவரிசை139th of 565 in state
5th of 12 in county[5]
ஏற்றம்121 ft (37 m)
மக்கள்தொகை
 (2010 Census)[7][8][9]
  மொத்தம்13,642
  மதிப்பீடு 
(2014)[10][11]
14,112
  தரவரிசை180th of 565 in state
9th of 12 in county[12]
  அடர்த்தி671.5/sq mi (259.3/km2)
  அடர்த்தி தரவரிசை416th of 566 in state
11th of 12 in county[12]
நேர வலயம்ஒசநே-5 (Eastern (EST))
  கோடை (பசேநே)ஒசநே-4 (Eastern (EDT))
சிப் குறியீடு
08691[13]
இடக் குறியீடு609[14]
FIPS3402163850[5][15][16]
GNIS feature ID0882122[5][17]
இணையதளம்www.robbinsville-twp.org
மூடு

தற்போது இராபின்சுவில் நகரியமாக உள்ளப் பகுதி துவக்கத்தில் கிழக்கு விண்ட்சர் நகரியத்திலிருந்து சிலபகுதிகளைப் பிரித்தெடுத்து வாசிங்டன் நகரியம் (சியார்ச் வாசிங்டன் நினைவாக[19]) என மார்ச் 15, 1859 அன்று நியூ செர்சி சட்டப்பேரவையால் சட்டவாணை மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது.[20] நியூ செர்சி மாநிலத்தில் இதே பெயரில் ஐந்து நகராட்சிகள் இருந்தமையால் நகரியத்தின் பெயர் வாசிங்டன் நகரியத்திலிருந்து தற்போதைய பெயருக்கு மாற்ற நவம்பர் 6, 2007இல் 1,816 ஆதரவு 693 எதிர்ப்பு வாக்குகளுடன்[21] நிறைவேற்றப்பட்டது. அலுவல்முறையான பெயர் மாற்றம் சனவரி 1, 2008இல் நிகழ்ந்தது.[22]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.