From Wikipedia, the free encyclopedia
இரட்டைப்படைக் குளம்பிகள் என்பன பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும். இதனை ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்று அறிவியலில் கூறுவர். ஆர்ட்டியோடாக்டிலா என்னும் இவ் ஆங்கிலச் சொல்லை ரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இவ் ஆங்கிலச்சொல், ஆர்ட்டியோசு (αρτιος) = இரட்டைப்படை எண் + டாக்டிலோசு (δακτυλος) = விரல் என்னும் இரு கிரேக்க மொழிச் சொற்களால் ஆன கூட்டுச்சொல். குளம்பு என்பது கால்களின் விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைப்பு. குளம்புள்ள விலங்குகளைக் குளம்பிகள் என்று அழைப்பர். குளம்புள்ள விலங்குகளை ஆங்கிலத்தில் அங்குலேட் (ungulate) என்கின்றனர். அங்குலேட் என்னும் சொல் குளம்பு என்று பொருள் படும் அங்குலா (ungula) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெற்றது. இது 1802 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது[1]. இவ் உயிரின வரிசையில் பன்றிகள், நீர்யானைகள், ஒட்டகங்கள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகள் அடங்கும். இவ்விலங்குகளின் உடல் எடை இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால் அவை மீதும் ஈடான எடை விழுகின்றது. ஆனால் ஒற்றைப்படைக் குளம்பிகளில் (பெரிசோடாக்டில்களில், perissodactyls) பெரும்பாலான எடை மூன்றாவது விரலில் விழுகின்றது. இரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு, அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள கணுக்கால் எலும்பின் (Talus, டாலசு எலும்பு) அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால் பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]
இரட்டைப்படைக் குளம்பி புதைப்படிவ காலம்: முந்தைய முன் ஊழிக்காலம் - அண்மை | |
---|---|
இதன் சில விலங்குகள் | |
சம இரட்டைக்குளம்புகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
உள்வகுப்பு: |
|
வரிசை: |
|
பெருவரிசை: |
|
வரிசை: | இரட்டைப்படைக் குளம்பி ஓவன், 1848 |
துணைவரிசை: |
|
குடும்பங்கள் | |
|
உலகில் ஏறத்தாழ 220 இரட்டைப்படைக் குளம்பு உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் பலவும் மாந்தர்களின் பண்பாடு, வளர்ச்சி, நல்வாழ்வுக்கு மிக இன்றியமையாதவையாக இருக்கின்றன.
'ஆர்ட்டியோடாக்டிலா' என்ற சொல்லை இரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இந்த உயிரின வகைப்பாட்டியல் சொல்,
என்ற இரு கிரேக்கச் சொற்களில் இருந்து உருவாக்கினார்.
இங்கு விரல் என்பது, குளம்பு ஆக மாற்றம் அடைந்துள்ளது. குளம்பு என்பது விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைவுத் தகவு ஆகும். எனவே, குளம்புள்ள விலங்குகளை, குளம்பிகள் என்கிறோம்.
இவைகள் அன்டார்டிகா தவிர அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன. ஆசுத்திரேலியாவிலும், நியூசிலாந்திலும் இவைகள் மனிதர்களால் அறிமுகபடுத்தப்பட்ட விலங்கினங்கள் என கண்டறியப்பட்டுள்ளன.[8]
இவ்விலங்குகளின் விரல்கள், குளம்புகளாக மாற்றம் அடைந்துள்ளன. மாற்றமுற்ற அக்குளம்புகள், இவ்விலங்குகளிடையே, எண்ணிக்கையில் வேறுபட்டு இருக்கின்றன. இக்குளம்புகள் எண்ணிக்கையில் வேறுபட்டாலும், இரண்டிரண்டாக, சம அளவில் இருக்கின்றன. அதனால் தான், இவ்விலங்குகளை இரட்டைப்படை விரல்கள் என்று பொருள்படும் ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்ற உயிரியல் வரிசையில் அமைத்துள்ளனர்.
இவ்விலங்குகளின் உடல் எடை, இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால், அவை மீதும் ஈடான எடை விழுகின்றது.ஆனால், ஒற்றைப்படைக் குளம்பிகளில்பெரும்பாலான எடை, மூன்றாவது விரலில் விழுகின்றது.
இரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு யாதெனில், அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள, கணுக்கால் எலும்பின் டாலசு (Talus) எலும்பு அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால், பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.