From Wikipedia, the free encyclopedia
இரட்டை ரோஜா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 12 ஆகத்து 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை நண்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பப் பின்னணியைக் கொண்டது.[1][2][3]
இரட்டை ரோஜா | |
---|---|
வகை |
|
இயக்கம் |
|
நடிப்பு |
|
இசை | கிரண் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 1,013 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சுருதி நாராயணன் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஸ்ருதி ஸ்டூடியோஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 12 ஆகத்து 2019 – 17 மார்ச்சு 2023 |
Chronology | |
முன்னர் | நிறம் மாறாத பூக்கள் (14:00) கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (13:30) சூர்யவம்சம் (13:00) |
பின்னர் | என்றென்றும் புன்னகை (14:00) (13:30) |
தொடர்புடைய தொடர்கள் | அக்கா செல்லலு |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அக்கா செல்லலு' என்ற தெலுங்கு மொழி தொடரை மையமாக வைத்து ரோஸ்.நந்தகுமார் என்பவர் இயக்க, சாந்தினி தமிழரசன்,[4] அக்ஷய் கமல் மற்றும் நிமேஷ் சாகர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 17 மார்ச்சு 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 1,013 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
இரட்டை சகோதரிகளான அனு, அபி இருவரும் ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும், எதிரெதிர் துருவங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அக்கா அனு சுயநலம் கொண்டவள். தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவள். தங்கை அபி அனுவுக்கு நேரெதிர், அபி. குடும்பத்துக்காகவே யோசிப்பவள். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பியை மணப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்தான் கதை.
இந்தத் தொடரின் நாயகியாக பகல் நிலவு தொடர் புகழ் ஷிவானி நாராயணன், அனு, அபி என இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது நடிகை சாந்தினி தமிழரசன் இந்த வேடங்களில் நடிக்கிறார். இவர் தாழம்பூ தொடரில் நடித்துள்ளார். அண்ணனாக நிமேஷ் சாகர், தம்பியாக அக்ஷய் நடிக்கிறார்கள். சாந்தினியின் அப்பாவாக பிரபல நடிகர் பூவிலங்கு மோகன் நடிக்கிறார். அம்மாவாக சபிதா ஆனந்த் நடிக்கிறார்.
இந்த தொடர் 12 ஆகத்து 2019 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை வரை திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, 23 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை நண்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான தேதி | நாட்கள் | நேரம் | அத்தியாங்கள் |
---|---|---|---|
23 ஆகத்து 2021 - 17 மார்ச்சு 2023 | 13:00 | 478-1,013 | |
27 சூலை 2020 - 21 ஆகத்து 2021 | 13:30 | 158-477 | |
12 ஆகத்து 2019 - 27 மார்ச் 2020 | 14:00 | 1-157 | |
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2019 | 2.8% | 4.1% |
2020 | 2.1% | 3.8% |
1.7% | 2.8% | |
2021 | 1.9% | 3.1% |
0.0% | 0.0% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.