தாவர வகை From Wikipedia, the free encyclopedia
இரஃப்லேசியா அர்னால்டி (Rafflesia arnoldii) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்.[1] இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும்.[2] இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் அழுகிய மீன் நாற்றத்தில் இருக்கும்.[3] எனவே இது பிண மலர் (corpse flower) என்று அழைக்கப்படுகிறது. இது போர்னியோ பாங்குலு[4] , சுமத்ரா தீவு, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும்.[5]
இரஃப்லேசியா அர்னால்டி | |
---|---|
ரஃப்லேசியா அர்னால்டி மலரும் மொட்டும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஆஞ்சியோஸ்பெர்மம் |
தரப்படுத்தப்படாத: | யூடிகோட்டுகள் |
தரப்படுத்தப்படாத: | ரோசிடுகள் |
வரிசை: | மால்பிகியாலெஸ் |
குடும்பம்: | ரஃப்லேசியேசி |
பேரினம்: | ரஃப்லேசியா |
இனம்: | R. அர்னால்டி |
இருசொற் பெயரீடு | |
ரஃப்லேசியா அர்னால்டி R.Br. | |
வேறு பெயர்கள் | |
|
டைட்டன் ஆரம், தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.