இந்தோனேசிய நேரம்
இந்தோனேசியாவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமை / From Wikipedia, the free encyclopedia
இந்தோனேசிய நேரம் அல்லது இந்தோனேசிய சீர் நேரம் (ஆங்கில மொழி: Indonesia Standard Time), (மலாய்: Waktu Piawai Indonesia), (இந்தோனேசிய மொழி: Zona waktu Indonesia) என்பது இந்தோனேசியாவில் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கில மொழி: Greenwich Mean Time - GMT)) +06:00 மணி நேரம் முன்னதாக அமைகின்றது.
இந்தோனேசிய தீவுக்கூட்டம் புவியியல் ரீதியாக; ஆச்சே (Aceh) (UTC+06:00) நிலப்பகுதியில் தொடங்கி பப்புவா நியூ கினி (Papua) (UTC+09:00) நிலப்பகுதிகள் வரை; நான்கு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தோனேசிய அரசாங்கம் அதன் நாட்டில் மூன்று நேர மண்டலங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது.[1]