இந்தோனேசியா
தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
இந்தோனேசியா அல்லது இந்தோனேசியக் குடியரசு (ஆங்கிலம்: Indonesia அல்லது Republic of Indonesia) என்பது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா பகுதிகளில் 17,508 தீவுகளைக் கொண்ட நாடாகும். இந்த நாட்டில் 33 மாநிலங்கள் உள்ளன.[2]
இந்தோனேசிய குடியரசு Republik Indonesia | |
---|---|
குறிக்கோள்: பின்னேகா துங்கால் இகா சாவா மொழி: வேற்றுமையில் ஒற்றுமை | |
நாட்டுப்பண்: இந்தோனேசியா ராயா | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | சகார்த்தா |
ஆட்சி மொழி(கள்) | இந்தோனேசிய மொழி |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் | சொக்கோ விடோடோ |
• துணை அதிபர் | இயூசுஃபு கல்லா |
விடுதலை | |
• பிரகடனம் | ஆகத்து 17 1945 |
• அங்கீகாரம் | திசம்பர் 27 1949 |
பரப்பு | |
• மொத்தம் | 1,904,569 km2 (735,358 sq mi) (16-ஆவது) |
• நீர் (%) | 4.85% |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 275,273,774 (4 ஆவது) |
• 2020 கணக்கெடுப்பு | 270,203,917 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $3.995 டிரில்லியன் (7th) |
• தலைவிகிதம் | $14,535[1] (104 ஆவது) |
மமேசு (2019) | 0.718 உயர் · 107-ஆவது |
நாணயம் | உருப்பியா (IDR) |
நேர வலயம் | ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (பல) |
ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (இல்லை) | |
அழைப்புக்குறி | 62 |
இணையக் குறி | .id |
இந்த நாட்டில் 275 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் மிக அதிகமான முசுலிம் மக்களைக் கொண்ட நாடு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தையும், அதிபரையும் கொண்ட ஒரு குடியரசு. சகார்த்தா பெருநகரம் இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா ஆகிய நாடுகள் இந்த நாட்டின் எல்லைகளில் உள்ளன.
சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆத்திரேலியா ஆகிய நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அருகில் உள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் (G20 or Group of Twenty) அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி (17th-largest by nominal GDP) அடிப்படையில் உலகின் 17-ஆவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை (Purchasing power parity (PPP) அடிப்படையில் 15-ஆவது இடத்திலும் உள்ளது.