இந்திய-பாகிஸ்தான் போர், 1947(Indo-Pakistani War of 1947), பிரித்தானியவின் இந்தியப் பேரரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆண்டே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், ஹரி சிங் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை தங்கள் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள வேண்டி, 22 அக்டோபர் 1947 முதல் 31 டிசம்பர் 1948 முடிய நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போர் ஆகும்.[23] இப்போரில் பாகிஸ்தான், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது. இந்தியா, காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரில் இந்திய தரப்பில் 1,500 வீரர்கள் கொல்லப்பட்டனர், 3,500 வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 6,000 வீரர்கள் கொல்லப்பட்டனர், 14,000 வீரர்கள் காயமடைந்தனர்.

மேலதிகத் தகவல்கள் நாள், இடம் ...
இந்திய பாகிஸ்தான் போர் 1947 - 1948
இந்திய-பாக்கிஸ்தான் போர்களும் முரண்பாடுகளும் பகுதி

1947-48 போரில் இந்தியப் படையினர்
நாள் 22 அக்டோபர் 1947 – 5 சனவரி 1949
(1 ஆண்டு, 2 மாதம்-கள் and 2 வாரம்-கள்)
இடம் காஷ்மீர்
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை (ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள்) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை இந்தியா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததது.[1]
பிரிவினர்
இந்தியா இந்தியா பாக்கித்தான் பாகிஸ்தான்
தளபதிகள், தலைவர்கள்
இந்திய ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு
இந்தியா இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஜெனரல் ரோப் லாக்கார்ட்[9]
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஜெனரல் ராய் புட்சர் [9]
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஏர் மார்ஷல் தாமஸ் எல்ம்கிர்ஸ் [9]
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு லெப்டினண்ட் ஜெனரல் டுட்லி ரஸ்சல்[9]
இந்தியா லெப்.ஜெனரல் கே. எம். கரியப்பா[9]
இந்தியா லெப்.ஜெனரல் எஸ். எம். ஸ்ரீநாகேஷ்[10][11]
இந்தியா மேஜர் ஜெனரல் கே. எஸ். திம்மையா[9]
இந்தியா மேஜர் ஜெனரல் கல்வந்த் சிங்
[9]
ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங்
ஜம்மு காஷ்மீர் பிரதம அமைச்சர் மெகர் சந்த் மகாஜன்
இடைக்காலத் தலைவர் சேக் அப்துல்லா
பிரிகேடியர் ஜெனரல் இராஜிந்தர் சிங்
லெப்.கர்னல் காஷ்மீர் சிங் கடோச் [12]
பாகிஸ்தான் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா
பிரதம அமைச்சர் லியாகத் அலி கான்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஜெனரல் பிராங்க் மெஸ்சர்வி[9]
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஜெனரல் டக்லஸ் கிரேசி[9]
பாக்கித்தான் மேஜர் குர்சித் அன்வர் Maj.[13]
பாக்கித்தான்லெப்.கர்ணல் அஸ்லாம் கான்[7][8]

பாக்கித்தான் கர்னல் முகமது அக்பர் கான்[14]
பாக்கித்தான் கர்னல் சேர் கான்[14]
பாக்கித்தான் மேஜர் ஜெனரல் ஜமான் கியானி[13]
பாக்கித்தான் பிரிகேடியர் இராஜா ஹபீப் ரெக்மான்[15]
பாக்கித்தான் மேஜர் வில்லியம் பிரவுன்[7]
இழப்புகள்
கொல்லப்பட்டோர் 1,104 [16][17][18][19]
காயமடைந்தோர் 3,154[16][20]
கொல்லப்பட்டோர் 6,000 [20][21][22]
~காயமடைந்தோர் 14,000[20]
முதலில் பஷ்தூன் மக்களும், பின்னர் பாகிஸ்தான் படையினரும் காஷ்மீரில் ஊடுவிருவினர். இவர்கள்து தாக்குதலை முறியடிக்க இந்திய இராணுவம் ஜம்மு காஷ்மீரில் களத்தில் இறங்கினர்.
மூடு
போர் நிறுத்தத்திற்குப் பின் ஜம்மு காஷ்மீரின் வரைபடம், 31 டிசம்பர் 1948

இந்திய-பாகிஸ்தான் இடையே நடந்த நான்கு போர்களில் முதல் போர் என்பதால் இப்போரை முதல் இந்திய-பாகிஸ்தான் போர் என்பர்.

போருக்கான காரணம்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை போது இசுலாமியர் பெரும்பான்மை கொண்ட ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை ஆண்ட இந்து மன்னரான ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் நாட்டை இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைய விருப்பமில்லாது தனித்து ஆள விரும்பினார்.

இசுலாமிய பெரும்பான்மை கொண்ட காஷ்மீர் பகுதிகளை கைப்பற்ற, பாகிஸ்தானின் தூண்டிதலின் பேரில், 22 அக்டோபர் 1947 அன்று பஷ்தூன் பழங்குடி மக்களைக் கொண்ட போராளிகள் குழு, காஷ்மீர் பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கினர். எனவே மன்னர் ஹரி சிங் இந்தியாவின் இராணுவ உதவியைக் கோரினார். இந்தியா விதித்த நிபந்தனையின்படி, இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா தன் இராணுவத்தை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பியது.[24]

இந்தியா இராணுவம் ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்குள், பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பஷ்தூன் மக்கள், வடக்கு நிலங்கள் முழுவதையும் மற்றும் மேற்கு காஷ்மீர் பகுதிகளில் (ஆசாத் காஷ்மீர்) சிறிது கைப்பற்றியது. எஞ்சிய ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளை பாகிஸ்தானுடன் போரிட்டு இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் அவை தலையிட்டு இந்திய-பாகிஸ்தான் போரை 1 சனவரி 1948-இல் முடிவுக்கு கொண்டு வந்தது.

போரின் முடிவுகள்

  1. 1948-இல் மன்னர் ஹரி சிங் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் இராச்சியம் கலைக்கப்பட்டது.
  2. 1949-ஆம் ஆண்டு ஐ. நா. அவை, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லையாக போர் நிறுத்தக் கோடு வரையறை செய்தது.
  3. 1972ஆம் ஆண்டில் சிம்லா ஒப்பந்தப்படி போர்நிறுத்தக் கோடே எல்லைக் கட்டுப்பாட்டு கோடாக மாறியது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.