1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
From Wikipedia, the free encyclopedia
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் (Indo-Pakistani War of 1971) என்பது 1971 இல் வங்காளதேச விடுதலைப் போர் காலத்தில் இந்தியாவுக்கும் பாக்கித்தான்னுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டையைக் குறிக்கின்றது. 3 திசம்பர் 1971 அன்று 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாக்கிஸ்தான் வலிந்த தாக்குதலை மேற்கொண்டதும் இந்தியா கிழக்கு பாக்கிஸ்தான் விடுதலைப் போருக்குள் நுழைந்தது.[21][22] இப்போர் 13 நாட்கள் நீடித்து, வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் நடைபெற்ற போராக இடம்பிடித்துள்ளது.[23][24]
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வங்காளதேச விடுதலைப் போர், இந்திய-பாகிஸ்தான் போர்கள் பகுதி | |||||||||
![]() 1971 இல் டிசம்பர் 16 அன்று பாகிஸ்தான் தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்திய தளபதி ஜெகத் சிங் அரோராவிடம் சரணடைதலில் கையொப்பம் இடுகிறார். |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இந்தியா | பாக்கித்தான் | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
இந்தியக் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சாம் மானேக்சா ஜெகத் சிங் அரோரா பெவூர் சன்டெத் சகத் சிங் ஜெ. எப். ஆர். ஜேக்கப் மல்கோட்ரா நந்தா பிரதாப் லால் முதலமைச்சர் தயுவுதீன்அகமட் ஒஸ்மானி சபியுல்லா சியாவுர் ரகுமான் கலட் முசாரப் | அதிபர் யகாயா கான் பிரதமர் நூருல் அமின் அப்துல் கமிட் கான் நியாசி கசன் கான் டிக்கா கான் அப்துல் அலி சரிப் பற்றிக் கலகான் பர்மன் அலி யம்சத் யன்யூலா † முசபர் கசன் அப்துல் ரகிம் |
||||||||
பலம் | |||||||||
முக்டி பகினி: 175,000 இந்தியப் பாதுகாப்புப் படைகள்: 500,000 மொத்தம்: 675,000 | பாக்கிஸ்தான் ஆயுதப்படைகள்: 365,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
2,500[8]–3,843 இறப்பு.[9]
பாக்கிஸ்தான் அறிக்கை
இந்திய அறிக்கை
நடுநிலை அறிக்கை
| 9,000 இறப்பு[14] 25,000 காயம்[15]
பாக்கிஸ்தான் அறிக்கை
இந்திய அறிக்கை
நடுநிலை அறிக்கை
|
வெளிநாட்டு எதிர்வினை மற்றும் ஈடுபாடு
சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா

இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா அல்லது சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டால் சோவியத் ஒன்றியம் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இந்தியாவிற்குச் சோவியத் ஒன்றியம் உறுதியளித்தது. இந்த உறுதி 1971 ஆகத்து மாதம் கையொப்பமிடப்பட்ட இந்திய சோவியத் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.[25]
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பாக்கித்தான் பக்கம் நின்றது. பாக்கித்தானுக்கு அரசியல், பொருளாதார மற்றும் பொருளுதவி செய்தது. வங்காளதேச உள்நாட்டுப் போரில் தலையிட மறுத்தது. பாக்கித்தான் மீது இந்தியா படையெடுத்தால் இந்தியத் துணைக் கண்டத்தில் சோவியத் ஆதிக்கம் அதிகமாகும் என அமெரிக்க அதிபர் நிக்சன் அச்சம் கொண்டார். உலக அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் நிலை மற்றும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் புதிய கூட்டாளியான சீனாவின் நிலையையும் அது பாதிக்கும் என அவர் கருதினார். பாக்கிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை அளிக்க ஈரானை நிக்சன் ஊக்குவித்தார்.[26] கிழக்குப் பாக்கித்தானில் பாக்கித்தானிய இராணுவம் இனப்படுகொலையில் ஈடுபடுவதைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் அளித்த தகவல்களையும் நிக்சன் பொருட்படுத்தவில்லை.[27][28][29] இந்தியா படைகளைப் பின்வாங்க வேண்டுமென நிக்சன் மற்றும் கிசிங்கர் சோவியத்துகளிடம் அதிக அழுத்தத்தைக் கொடுத்தனர்.[30]
கிழக்கில் பாக்கித்தானின் தோல்வி உறுதி என்று தெரிந்தபோது நிக்சன் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்றை வங்காள விரிகுடாவில் போருக்கு ஆயத்தமான நிலையில் வரவழைத்தார்.[31] 11 திசம்பர் 1971ஆம் ஆண்டு அந்தக் கப்பல் மற்றும் அதன் துணைக் கப்பல்கள் வங்காள விரிகுடாவை வந்தடைந்தன. ஐக்கிய இராச்சியமும் அதன் பங்குக்கு ஒரு வானூர்தி தாங்கிக் கப்பலைக் கொண்ட கப்பல்களின் குழுவை அனுப்பி வைத்தது.[25][32]
6 மற்றும் 13 திசம்பர் அன்று, சோவியத் கப்பல் படையானது விளாதிவசுத்தோக்கிலிருந்து இரண்டு கப்பல் குழுக்களை அனுப்பியது. அந்தக் கப்பல் குழுவானது இந்திய பெருங்கடலில் 18 திசம்பர் 1971 முதல் 7 சனவரி 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் கப்பல் குழுவைப் பின்தொடர்ந்தது. இந்திய பெருங்கடலில் ஐக்கிய அமெரிக்காவின் கப்பல் குழுவால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலை நீக்குவதற்காக சோவியத்து ஒன்றியம் ஒரு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலையும் கொண்டுவந்தது.[33][34]
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.