இதயத்தசை வீக்கம்
From Wikipedia, the free encyclopedia
இதயத்தசை வீக்கம் என்பது நோய் கிருமிகளின் தோற்றுதலாலோ அல்லது உடற்செயலியல் மாற்றம் ஏற்படுவதலோ இதய தசையில் ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கமடைத்தல் ஆகும்.[1]நோய் அறிகுறிகள் சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, உடற்பயிற்சி திறன் குறைதல், சோர்வு மற்றும், அசாதாரண இதய துடிப்பு ஆகும்.[1] நோய் தாக்கம் சில மணி நேரம் முதல் பல மாதங்கள் வரை இருக்கும்.[1] இதன் விளைவுகளாக இதயம் செயலிழப்பு, இதய தசை நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.[1]
இதயத்தசை வீக்கம் | |
---|---|
ஒத்தசொற்கள் | இதய வீக்க நோய்கள் |
ஒரு இதயத்தசை வீக்கம் நோய் உள்ளவரின் திசு மாதிரியின் நுண்ணோக்கி படிமம் | |
சிறப்பு | இதயவியல் |
அறிகுறிகள் | சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, சோர்வு, உடற்பயிற்சி திறன் குறைவு அசாதாரண இதய துடிப்பு[1] |
சிக்கல்கள் | இதயம் செயலிழப்பு, இதய தசை நோய்கள் மற்றும் மாரடைப்பு[1] |
கால அளவு | சில மணி நேரம் முதல் பல மாதங்கள் வரை[1] |
காரணங்கள் | பொதுவாக வைரஸ் கிருமி தொற்று, பாக்டீரியா கிருமிகள், சில வகை மருந்து பொருட்கள், நச்சு பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள்[1][2] |
நோயறிதல் | இதய துடிப்பலைஅளவி, இரத்த தரோபோனின் அளவு, இதய காந்த அதிர்வு அலை வரைவு, இதய உயிரகச்செதுக்கு, இதய மீயொலி[1][2] |
சிகிச்சை | மருந்துகள், பதிக்கக்கூடிய இதய உதறல் ஒடுக்கி, இதய மாற்று அறுவை சிகிச்சை[1][2] |
மருந்து | ஏசிஈ மட்டுப்படுத்திகள், பீட்டா தடுப்பான்கள், சிறுநீரிறக்கிகள், புரணித்திரலனையம், சிரைவழி எதிர்ப்புப்புரதங்கள்[1][2] |
முன்கணிப்பு | பல்வேறு[3] |
நிகழும் வீதம் | 2.5 மில்லியன் நபர்கள் (2015)[4] |
இறப்புகள் | 3,54,000 நபர்கள் (2015)[5] |
இதயத்தசை வீக்கம் பொதுவாக வைரஸ் கிருமி தொற்றுதலால் ஏற்படுகிறது.[1] மற்ற நோய் காரணிகளாக பாக்டீரியா கிருமிகள், சில வகை மருந்து பொருட்கள், நச்சு பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள் அமைகிறது.[1][2] நோய் கண்டறியும் முறைகளாக இருப்பவை முறையே இதய துடிப்பலைஅளவி பயன்படுத்துவது, தரோபோனின் அளவு அதிகரித்துள்ளதா என காண்பது, இதய காந்த அதிர்வு அலை வரைவு பார்ப்பது, சில சமயங்களில் இதய உயிரகச்செதுக்கு ஆராய்வது ஆகும்.[1][2] இதய மீயொலி ஆய்வு இதய அடைப்பிதழ் குறைபாடுகளை கண்டறிய பெரிதும் உதவுகிறது.[2]
நோயின் தாக்கம் மற்றும் நோயின் காரணிகளை பொறுத்து சிகிச்சை முறை அமையும்.[1][2] பொதுவாக இதய அழுத்த மாற்று நொதியம் குறைப்பான், இரத்த அழுத்தம் குறைப்பான் மற்றும் நீர் சத்து குறைப்பான் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படும்.[1][2] மருந்துகள் மூலம் நோய் தாகம் குறையும் போது உடற்பயிற்சி செய்வது அவசியமில்லை.[1][2] உயிர் கிரியா ஊக்கி அல்லது பிறபொருளெதிரிகளை இரத்த நாளத்தில் உட்செலுத்துவதால் சில நோய்களை குணப்படுத்த முடியும். [1][2] மிகவும் மோசமான நோய் தாகத்திற்கு தானியங்கி இதய துடிப்பான் அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை பரிசீலனை செய்யப்படுகிறது.[1][2]
2013 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இந்த கடுமையான இதயத்தசை வீக்கம் நோயினால் பதிப்பிற்குள்ளானர்.[6] பொதுவாக அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டாலும் இளம் வயது நபர்களே அதிகளவில் பாதிப்படைகின்றனர்.[7] பெண்களை விட ஆண்களிடியே இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.[1] [2] 2015 ஆம் ஆண்டில் இந்த நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,54,000 பேர் இது 1990 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கையான 2,94,000 என்ற அளவை விட அதிகமாகும்..[8][9] இந்த நோயறிகுறி 1800களின் நடு ஆண்டுகளிலிருந்து பதியப்பட்டுள்ளது.[10]
இதயத்தசை வீக்கம் 1600 ஆம் ஆண்டு காலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.[11] ஆனால் 1837 ஆம் ஆண்டில் இதயத்தசை வீக்கம் என்ற சொற்பதம் செர்மானிய மருத்துவர் ஜோசப் பிரிடரிக் சோபர்ன்ஹீம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[12] இருந்தபோதும் இந்த சொற்பதம் இரத்த சுற்றோட்ட மண்டல நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் குருதி ஊட்டக்குறை இதய நோய்க்கு தவறாக பயன்படுத்தினர்.[13][14] இதயத்தசை வீக்கத்தால் பாதிப்பு பற்றிய சரியான தகவல்கள் இல்லை ஆயினும் 1 முதல் 9% நோயாளிகள் இதயத்தசை வீக்கத்தால் பாதிப்புக்கு ஆளானவர்களே. இளம் இளைஞர்கள் திடீரென இறப்பதற்கு 20% இந்த இதயத்தசை வீக்கம் காரணமாக இருக்கிறது.ஹச்.ஐ.வி நோய் தொற்று உள்ள நோயாளிகளில் 50% அல்லது அதற்கு மேல் இந்த இதயத்தசை வீக்க நோயால் பாதிக்கப்படுகின்றனர்.[15]