![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Gray242.png/640px-Gray242.png&w=640&q=50)
இடுப்பு வளையம்
From Wikipedia, the free encyclopedia
மனித உடற்கூற்றியலில், இடுப்பு வளையம் (pelvic girdle) அல்லது இடுப்பு (pelvis) அல்லது இடுப்பாக்கு எலும்புகள் (pelvic bones / bony pelvis) எனப்படுவது உடம்பின் கீழ்ப்பகுதியாகவும், வயிற்றுக்குக் கீழாகவும், பின்பக்கமாகவும் அமைந்திருந்து, உடம்புப் பகுதியை கால்களுடன் இணைக்கும் பகுதியாகும்[1]. இந்த சொல்லானது பல அமைப்புக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது[1].
- முள்ளந்தண்டு நிரல் பகுதியை, தொடையெலும்புடன் இணைக்கும் பகுதி.
- இடுப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் இடுப்புக்குழி: இது மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- வயிற்றுக்குழியின் உள் பகுதி, இது பொய்யான இடுப்பு எனவும் அழைக்கப்படும்.
- அடிவயிற்றுக்கும், மலவாசலுக்கும் இடைப்பட்ட பகுதியையும் (perineum), இடுப்புக்குழியையும் சூழ்ந்திருக்கும் உண்மையான இடுப்பெலும்பு.
- இடுப்புப் பகுதி
விரைவான உண்மைகள் எலும்பு: இடுப்பு வளையம் ...
எலும்பு: இடுப்பு வளையம் | |
---|---|
![]() | |
பெண்ணின் இடுப்பு வளையம் | |
![]() | |
ஆணின் இடுப்பு வளையம் | |
Gray's | subject #57 236 |
மூடு
இடுப்பு வளையமானது உடலின் சமநிலையையும், உறுதிநிலையையும் பேணுவதில் முக்கிய பங்கெடுக்கும். இந்த இடுப்பு வளையமானது முள்ளந்தண்டு நிரலையும், தொடையெலும்பையும் இணைக்கும் எலும்புகளைக் கொண்டிருக்கும்.