![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Idaykka.jpg/640px-Idaykka.jpg&w=640&q=50)
இடக்கை
இசைக்கருவி / From Wikipedia, the free encyclopedia
இடக்கை (ஒலிப்புⓘ) என்பது கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்று. இக்கருவி ஒரு தோல் வாத்தியம் என்றாலும் கேரள இசையில் இது தாள வாத்தியமாக மட்டும் அல்லாமல் சுருதிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.[1][2][3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Idaykka.jpg/640px-Idaykka.jpg)
பிற வாத்தியங்களுக்கு இடையே வாசிக்க பயன்படுத்தப்படுவதால் தான் இதற்கு இடக்கை என்று பெயர் சூட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கேரளாவில் பொதுவாக மாரார், பொதுவாள் போன்ற இனத்தார் இடக்கை வித்வான்களாக உள்ளனர். கோவில்களின் மூலஸ்தானத்தில் அல்லது கர்ப கிருகத்தில் பயன்படுத்தப்படும் அபூர்வமான இசைக்கருவிகளில் ஒன்று இடக்கை. இயக்கப்படாத காலத்தில் இக்கருவியை கருவறையின் முன்பகுதியல் தொங்கவிடப்பட வேண்டும் என்பது ஒரு நியதி ஆகும்.