![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Spratly_Islands-CIA_WFB_Map.png/640px-Spratly_Islands-CIA_WFB_Map.png&w=640&q=50)
இசுப்ராட்லி தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
இசுப்ராட்லி தீவுகள் ஆங்கிலம்: Spratly Islands; மலாய்: Kepulauan Spratly; பிலிப்பினோ மொழி: Kapuluan ng Kalayaan; சீனம்: 南沙群島/南沙群岛; வியட்நாமியம்: Quần đảo Trường Sa) என்பது தென் சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.[1] இந்தத் தீவுக்கூட்டம் பல சிறிய பெரிய தீவுகள், சிறுதீவுகள், பள்ளத்தீவுகள், மற்றும் 100-க்கும் மேற்பட்ட பவளப் படிப்பாறைகளால் ஆனது. சில இடங்களில் நீரில் மூழ்கிய பழைய பவளப் பாறைகளால் தொகுக்கப்பட்டும் உள்ளது.[2]
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
![]() இசுப்ராட்லி தீவுகள் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்சீனக் கடல் |
ஆள்கூறுகள் | 10°N 114°E |
மொத்தத் தீவுகள் | 750 |
முக்கிய தீவுகள் | இத்து அபா தீவு; நாம்யிட் தீவு பாரோலா தீவு, சின் கோவ் தீவு; சோங் து தாய் தீவு; இசுப்ராட்லி தீவு; லாயாங் லாயாங் தீவு; தித்து தீவு; யோர் பாராட் தீவு |
நிர்வாகம் | |
மூடு
இந்தத் தீவுக்கூட்டம் பிலிப்பீன்சு, மலேசியா மற்றும் தெற்கு வியட்நாம் நாடுகளின் கடற்கரைகளில் அமைந்துள்ளது. 1843-ஆம் ஆண்டில் இசுப்ராட்லி தீவுகளைக் கண்டுபிடித்த பிரித்தானிய திமிங்கல வேட்டையாடும் கப்பலின் தலைவர் ரிச்சர்ட் இசுப்ராட்லியின் (Richard Spratly) பெயரால் இந்தத் தீவுக்கூட்டத்திற்குப் பெயரிடப்பட்டது.