இசியம்
From Wikipedia, the free encyclopedia
இசியம் (Izium or Izyum)[3][4] (உக்ரைனியன்: Ізюм, உச்சரிப்பு [iˈzʲum]; உருசியம்: Изюм, lit. "raisin"[5]), உக்ரைன் நாட்டின் வடகிழக்கில் உள்ள கார்கிவ் மாகாணத்தின், இசியம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது செவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் மாகாணத் தலைநகரான கார்கீவ் நகரத்திற்கு தென்கிழக்கில் 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 45,884 ஆகும்.[6]
இசியம்
Ізюм Izyum | |
---|---|
நகரம் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Kharkiv Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 49°12′46″N 37°15′25″E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | கார்கீவ் |
மாவட்டம் | இசியம் |
நிறுவிய ஆண்டு | 1681 |
நகரத் தகுதி | 1765[1] |
அரசு | |
• மேயர் | வலேரி மர்ச்சென்கோ [2] |
பரப்பளவு | |
• மொத்தம் | 43.6 km2 (16.8 sq mi) |
ஏற்றம் | 71 m (233 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 45,884 |
• அடர்த்தி | 1,100/km2 (2,700/sq mi) |
அஞ்சல் சுட்டு எண் | 64300 |
இடக் குறியீடு | 380-5743 |
வாகனப் பதிவு | АХ, КХ |
இணையதளம் | city-izyum |
உக்ரைன் மீதான உருசியவின் படையெடுப்பின் போது, இசியம் நகரத்தை 1 ஏப்ரல் 2022 அன்று உருசியப் படைகள் கைப்பற்றினர். 10 செப்டம்பர், 2022 அன்று மீண்டும் இசியம் நகரத்தை உருசியப் படைகளிடமிருந்து உக்ரைனிய படைகள் திரும்பக் கைப்பற்றிய போது, இசியம் நகரத்தில் உக்ரைனிய இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 440 பொதுமக்களை கொன்று புதைத்த புதைக்குழிகளை கண்டுபிடிக்கப்பட்டது..[7][8][9][10]இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் பிரதிநிதிகள் இசியம் நகரத்திற்கு நேரில் வந்து விசாரிக்க உள்ளனர்.