இகுவாசு அருவி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
இகுவாசு அருவி அல்லது இகுவாசு நீர்வீழ்ச்சி (Iguazu Falls) இகுவாசு ஆற்றில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். இது பிரேசில் நாட்டின், பரானா (Paraná) மாநிலம் 20%, அர்ஜென்டினாவின் மாகாணமான மிசியோனெஸ் (Misiones) 80% ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அமைவிட ஆள்கூறு 25°41′தெ, 54°26′மே ஆகும். பல நீர்வீழ்ச்சிகளின் தொகுதியாக அமைந்துள்ள இது, 2.7 கிலோமீட்டர் (1.67 மைல்) தொலைவில் 270 அளவு வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவற்றுட் சில 82 மீட்டர் (269 அடி) வரையான உயரத்தைக் கொண்டுள்ளன எனினும், பெரும்பாலானவை ஏறத்தாழ 64 மீட்டர் (210 அடி) உயரங்களையே கொண்டவை.
இகுவாசு அருவி | |
---|---|
இகுவாசு அருவியின் தோற்றம் | |
அமைவிடம் | அர்ஜென்டினா: மிசியோனெஸ் மாகாணம் பிரேசில்: பரானா மாநிலம் |
ஆள்கூறு | 25°41′12″S 54°26′41″W |
வகை | பேரருவி |
மொத்த உயரம் | 60–82 மீட்டர்கள் (197–269 அடி)[1] |
வீழ்ச்சி எண்ணிக்கை | 275[1] |
நீளமான வீழ்ச்சியின் உயரம் | 82 மீட்டர்கள் (269 அடி)[1] |
மொத்த அகலம் | 2.7 கிலோமீட்டர்கள் (1.7 mi)[1] |
நீர்வழி | இகுவாசு ஆறு |
சராசரிப் பாய்ச்சல் வீதம் | 1,756 m3/s (62,010 cu ft/s)[1] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.