அர்கெந்தீனா
தென்னமெரிக்காவின் கூட்டாட்சிக் குடியரசு / From Wikipedia, the free encyclopedia
அர்கெந்தீனா (ஆங்கிலம்: Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.
ஆர்கெந்தீனா குடியரசு República Argentina | |
---|---|
குறிக்கோள்: இசுப்பெயின்: En Unión y Libertad ஒற்றுமையிலும் விடுதலையிலும் | |
நாட்டுப்பண்: இமினோ நசினல் அர்செந்தினோ | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | புவேனோசு ஐரேசு |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானா |
அரசாங்கம் | கூட்டாட்சி குடியரசு |
• அதிபர் | நெசிடர் கா.கிர்க்னர் |
விடுதலை | |
• மே புரட்சி | மே 25 1810 |
• பிரகடனம் | சூலை 9 1816 |
• அங்கீகாரம் | 1821 ( போர்த்துக்கல்) |
பரப்பு | |
• மொத்தம் | [convert: invalid number] (8ஆவது) |
• நீர் (%) | 1.1 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 38,747,000 (30ஆவது) |
• 2001 கணக்கெடுப்பு | 36,260,130 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $533.722 பில்லியன் (22ஆவது) |
• தலைவிகிதம் | $14,109 (50ஆவது) |
மமேசு (2003) | 0.863 அதியுயர் · 34ஆவது |
நாணயம் | அர்கெந்தீனா பீசோ (ARS) |
நேர வலயம் | ஒ.அ.நே-3 (அர்கெந்தீனா நேரம்) |
ஒ.அ.நே-3 (அர்கெந்தீனா கோடை நேரம்) | |
அழைப்புக்குறி | 54 |
இணையக் குறி | .ar |
¤ அர்கெந்தீனா ஐ.இ.யுடன் அந்தாட்டிக்காவின் மேலதிகமாக 1,000,000 km² பிரதேசத்தின் உறிமை தொடர்பாகவும் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்டுவிச்சுத் தீவுகள், போக்லாந்து தீவுகள் என்பவற்றின் 3,761,274 km² அளவான பிரதேசம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. |
இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான புவெனசு ஐரிசு நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் அவை, "மெர்கோசுர்" எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (சி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும்,[1][2][3][4][5][6][7] இடைத்தர வல்லரசுமான[8] ஆர்கெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்.[9] மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது.[10] இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது.[11] இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.[12] முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.