![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/Ayer_Itam_Penang_Skyline_%252840681753413%2529.jpg/640px-Ayer_Itam_Penang_Skyline_%252840681753413%2529.jpg&w=640&q=50)
ஆயர் ஈத்தாம், பினாங்கு
பினாங்குத் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
ஆயர் ஈத்தாம், பினாங்கு (ஆங்கிலம்: Air Itam; (மலாய்: Air Itam; சீனம்: 亚依淡; ஜாவி: اءير ايتم) என்பது மலேசியா, பினாங்கு, வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில்; பினாங்குத் தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். பினாங்குத் தீவில் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் ஆயர் ஈத்தாம்Ayer Itam, நாடு ...
ஆயர் ஈத்தாம் Ayer Itam | |
---|---|
![]() | |
![]() ஆயர் ஈத்தாம் புறநகரம் | |
ஆள்கூறுகள்: 5°24′22″N 100°17′47″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
தோற்றம் | 1794 |
அரசு | |
• நகராட்சி | பினாங்கு தீவு மாநகராட்சி |
• மேயர் | இவ் துங் சியாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 11500 |
தொலைபேசி எண் | +604 82 |
போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | www |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Penang_Museum_historical_painting_476.jpg/640px-Penang_Museum_historical_painting_476.jpg)
ஜார்ஜ் டவுன் நகர மையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. (3.7 மைல்) வடமேற்கில் ஆயர் ஈத்தாம் நகர்ப்பகுதி உள்ளது. இந்தப் புறநகர்ப் பகுதி பினாங்கு உணவு வகைகளுக்கு நன்கு அறியப்பட்ட இடங்களில் ஒன்றாகும்.
மேலும், பினாங்கு மலை மற்றும் கெக் லோக் சி சீனர் கோயில் (Kek Lok Si Temple) போன்ற சில முக்கியச் சுற்றுலா இடங்களை உள்ளடக்கிய இடமாகும்.[1]