ஆசிய நெடுஞ்சாலை 43
From Wikipedia, the free encyclopedia
ஆசிய நெடுஞ்சாலை 43 அல்லது ஏஎச்43 (AH43), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் உள்ள ஆக்ராவிலிருந்து இலங்கையில் உள்ள மாத்தறை என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாவிலுள்ள 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 3,754 கிலோமீட்டர்.
ஏஎச்1 நெடுஞ்சாலையை ஆக்ராவில் சந்திக்கும் இச் சாலையை, ஏஎச்47, ஏஎச்45, ஏஎச்44 என்பன சந்திக்கின்றன. இது, ஏஎச்46 நெடுஞ்சாலையை நாக்பூர் என்னுமிடத்தில் வெட்டிச் செல்கிறது.