From Wikipedia, the free encyclopedia
ஆங்கில-சூலு போர் (Anglo-Zulu War) பிரித்தானியப் பேரரசுக்கும் சூலு இராச்சியத்திற்கும் இடையே 1879ஆம் ஆண்டு நடந்தது. 1867இல் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டாட்சி சட்டத்தைப் போன்று தென்னாப்பிரிக்காவிலும் ஆபிரிக்க இராச்சியங்கள், பழங்குடி பகுதிகள், பூர் குடியரசுகளை ஒன்றிணைக்கும் அரசியல் முயற்சியில் பிரித்தானியா ஈடுபட்டது. இம்முயற்சியில் வெற்றிபெற்ற போர்முறைகளையும் பின்பற்றியது. 1874ஆம் ஆண்டு இத்தகைய ஒன்றிணைப்பை உருவாக்கும் இலக்குடன் சர் என்றி பார்டில் பிரெரே பிரித்தானிய அரசின் உயர் ஆணையராக அனுப்பப்பட்டார். இந்த முயற்சிக்கு தன்னாட்சியுடன் விளங்கிய தென்னாப்பிரிக்க குடியரசும் சூலுலாந்து முடியாட்சியும் தடையாக இருந்தன.[6]
ஆங்கில-சூலு போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
உரோர்க் டிரிஃப்ட் சண்டையை விவரிக்கும் ஓவியம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானியப் பேரரசு | சூலு இராச்சியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பேகன்சுபீல்டு கோமான் சேர் என்றி பார்டில் பிரெரே செம்சுபோர்டு கோமான் கார்னெட் வொல்செலி | செட்சுவாயோ கம்பாண்டெ இன்ட்சிங்வாயோ கோசா டாபுலாமான்சி கம்பாண்டெ |
||||||
பலம் | |||||||
முதலாவது படையெடுப்பு: 15,000–16,000:[1]
17 பீரங்கிகள்
10 பீரங்கிகள் | 35,000[4] | ||||||
இழப்புகள் | |||||||
1,902 கொல்லப்பட்டனர் 256 காயமடைந்தனர் | 6,930 கொல்லப்பட்டனர்[5] |
பிரெரே, பிரித்தானிய அரசின் அனுமதி பெறாமலே, தன்னிச்சையாகவும்[7][8] ஏற்கவியலாது என அறிந்தும் சூலுவுடன் போர் மூளத் தூண்டுதலாக சூலு அரசர் செட்சுவாயோவிற்கு திசம்பர் 11, 1878க்குள் உடன்படுமாறு ஓர் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.[9] இதன் தொடர்ச்சியாக, இறுதி நாள் முடிந்தபிறகு செம்சுபோர்டு கோமானை சுலுலாந்தின்மீது படையெடுக்க அனுப்பினார். [10] இந்தப் போரில் பல கடுமையான, குருதிதோய்ந்த, சண்டைகள் நடந்தன. துவக்கத்தில் ஐசாண்டில்வானா சண்டையில் சூலுக்கள் வெற்றி பெற்றனர். இச்சண்டைகள் இப்பகுதியில் பேரரசுவாதத்திற்கான குறியீடுகளாக விளங்குகின்றன. இந்தப் போரில் இறுதியில் பிரித்தானியர் வென்று சூலு நாடு தனது தன்னாட்சியை இழந்தது. சூலு இராச்சியப் பகுதி நதால் குடியேற்றத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டது; பின்னாளில் இது தென்னாப்பிரிக்க ஒன்றியத்தின் அங்கமாயிற்று.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.