From Wikipedia, the free encyclopedia
அல்போர்சு (ஆங்கிலம்: Alborz; ⓘ) மேலும், அல்புர்சு (Alburz), எல்புர்சு (Elburz) அல்லது எல்பர்சு (Elborz) என்றும் உச்சரிக்கப்படுகிறது. மேற்காசிய நாடான ஈரானின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடரான இது, கிட்டத்தட்ட மேற்கு காசுப்பியன் கடல் மற்றும் தெற்கு கடலோர பகுதியிலுள்ள அசர்பைஜான் எல்லை வரை நீண்டு, இறுதியாக வடகிழக்கில் நகர்ந்து குராசானின் வடக்குப் பகுதியில் உள்ள "அலடாக் மலைத்தொடர்" (Aladagh Mountains) எனும் மலைத்தொடரோடு இணைகிறது.[1] இந்த மலைத்தொடர், ஒரு மேற்கத்திய, மத்திய, மற்றும் கிழக்கு அல்போர்சு மலைத்தொடராக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய அல்போர்சு நெடுக்கம் (வழக்கமாக தாலிஷ் மலைத்தொடர் என்று அழைக்கப்படுகிறது) கிட்டத்தட்ட காசுப்பியன் கடலின் மேற்கு கடற்கரைப் பகுதியில் தெற்கு - தென்கிழக்கு முறைவரிசையில் அமைந்துள்ளது. மத்திய அல்போர்சு, மேற்கு காசுப்பியன் கடலின் ஒட்டுமொத்த தெற்கு கடற்கரைபகுதி மற்றும் கிழக்கே இருந்து இயங்குகிறது. மேலும் கிழக்கு அல்போர்சு, வட கிழக்கு திசையில் நேராக வடக்குப் பாகம் குராசான் பகுதியிலும், தென்கிழக்கு காசுப்பியன் கடல் நோக்கியும் உள்ளது. மேலும் ஈரானின் மிக உயர்ந்த (5610 மீட்டர்) மலையான "தமாவந்து மலைத்தொடர்" (Mount Damavand), மத்திய அல்போர்சு மலைத்தொடரில் அமைந்துள்ளது.[2]
அல்போர்சு (Alborz) என்னும் இப்பெயர், "ஹர பெறேசிடி"யில் (Harā Barazaitī) இருந்து தருவிக்கப்பட்டது. இது, ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவருமான சரத்துஸ்தர் என்பவரின் சரத்துஸ்திர சமய புனித நூலான அவெத்தாவில் உள்ள கற்பனை கதையில் வரும், ஒரு புகழ்பெற்ற மலையின் பெயராகும்.[3]
அல்போர்சு மலைத்தொடர், தெற்கு காசுப்பியன் மற்றும் ஈரானிய பீடபூமியின் இடையே ஒரு தடையாக உருவாகியுள்ளது. 60 முதல் - 130 கிலோமீட்டர் வரை அகலம் உள்ள இத்தொடரின் வண்டற் சார்ந்த மேற்பரப்பு, 419.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 358.9± 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான டெவோனியக் காலத்திலிருந்து[4][4], 40 முதல் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "இடைப்பரு ஊழிக்காலம்"[5] (Oligocene)வரையானதாக காலமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 201.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான சுராசிக் காலத்திய[6][6] சுண்ணாம்புக் கற்களால் வியாபித்துள்ள அல்போர்சு மலைத்தொடர், கருங் கற்களால் (Granite) ஆன உள்ளகம் (Core) கொண்டதாகும்.[7]
அல்போர்சு மலைத்தொடரின் தெற்கு சரிவுகளில் வழமையில் ஒழுங்கற்ற மற்றும் குறைவான வண்டற்படிவானது, அரை வறண்ட, அல்லது வறண்ட நிலையில் உள்ளன. பரப்பெல்லைகளாக கொண்ட வடக்கு சரிவுகளில் குறிப்பாக மத்திய அல்போர்சு மற்றும் மேற்கு பகுதிகளில் வழக்கமாக ஈரப்பதமான நிலையில் உள்ளன. மேலும், தெற்கு சரிவுகள் அல்லது எல்பர்சு எனும் நெடுக்கப் பகுதியானது, காடு அல்லத அகன்ற பரந்த மரங்கள் அற்ற புல்வெளி சூழ்நிலைப்பிரதேசமாக உள்ள இப்பிராந்தியத்தில், அதிக உயரமான சில மரங்கள் உலர்ந்த நிலையில் காணப்படுகிறது.[8] மேலும் இம்மலைத் தொடரின் சில பள்ளத்தாக்குகளில், "காட்டு சைப்ரசு" (wild cypress) தாவர வகைகள் மேலாதிக்க வடிவமாக இருக்கிறது. அதேவேளையில், மத்திய அல்போர்சு பகுதியின் மேற்கு செபித்ருத் (Sefidrud) என்னும் ஆற்றின் அருகேயுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் சைத்தூன் மரங்கள் அதிகளவில் வளர்கின்றன.[9] யூனிபர் (Juniper) என்னும் மரவகை, அணுக பகுதிகள் மற்றும் உயரம் மிகுந்த பொதுவான மரமாக அறியப்படும் இப்பகுதிகளில், வாதுமை அல்லது பாதாம் மரங்கள், பசுங்கொட்டை அல்லது உட்பசுந்கொட்டை எனும் குட்டைச் செடிகள், மற்றும் ஏசர் அல்லது மேப்பிள் போன்ற மரங்கள் நன்கு செழிக்கின்றன.[10] மேலும், "கோரோசனை மலையாடு" (Bezoar ibex), "பலன்போர்டு நரி" (Blanford fox), "ருப்பல் நரி" (Rüppell's fox), "செந்நரி" (Red fox), "பாரசீக தரிசு மான்" (Persian fallow deer), காட்டுப்பன்றி, "சிரியன் பழுப்பு கரடி" (Syrian brown bear), "பாரசீக சிறுத்தை" (Persian leopard), மற்றும் "இந்திய ஓநாய்" (Indian wolf) போன்ற முக்கிய விலங்கினங்களும், "பருந்து" (Buzzard), "வாத்து" (Goose), மரங்கொத்தி, "கிரிப்பான் கருடன்" (Griffon vulture), மற்றும் கழுகு முதலான பறவையினங்களும் இம்மலைத்தொடரை வாழ்விடமாக கொண்டுள்ளன. மேலும் அருகிவிட்ட காசுபியன் புலியினமும்,[11] அல்போர்சு மலைப் பிராந்தியத்தை இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்றன.[12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.