அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Alor Setar Railway Station மலாய்: Stesen Keretapi Alor Setar); சீனம்: 亚罗士打火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் அலோர் ஸ்டார் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
அலோர் ஸ்டார் Alor Setar | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அலோர் ஸ்டார் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | அலோர் ஸ்டார் கெடா மலேசியா | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 6.113056°N 100.369444°E | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||
தடங்கள் | 1 மலாயா மேற்கு கடற்கரை ETS கேடிஎம் இடிஎஸ் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | |||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | |||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | |||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2014 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), கெடா மாநிலத்தின் தலைநகரமான அலோர் ஸ்டார் மாநகரில் இந்த நிலையம் உள்ளது.[1]
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக அலோர் ஸ்டார் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம், கேடிஎம் இடிஎஸ்; கேடிஎம் கொமுட்டர் நிறுவனங்களின் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.
புதிய நவீன நிலையத்தைக் கட்டுவதற்கு வசதியாக, தனித்துவமான கடிகாரக் கோபுரத்துடன் கூடிய பழைய தொடருந்து நிலையம், 29 ஜனவரி 2013-இல் மூடப்பட்டது.[2]
பழைய நிலையத்திற்கு எதிரே ஒரு தற்காலிக நிலையம், தஞ்சோங் பெண்டகாரா சாலையில் கட்டப்பட்டது. அந்தத் தற்காலிக நிலையம், 12 ஜூன் 2014-இல் புதிய நிலையம் செயல்படத் தொடங்கும் வரை செயல்பாட்டில் இருந்தது.[3]
பழைய நிலையம் பாதுகாக்கப்பட்டு வடுகிறது. தற்போது உணவகம் மற்றும் சிற்றுண்டி சாலையாக மாற்றப்பட்டுள்ளது.[4]
2020-ஆம் ஆண்டில், தொடருந்து நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான இந்து ஆலயம், சாலைத் திட்டத்திற்கு வழி வகுக்கும் வகையில் இடிக்கப்பட்டது.
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பட்டர்வொர்த் நகரில் இருந்து வடக்கு எல்லைக்கு தொடருந்து வழித்தடங்களை அமைத்த இந்திய தொழிலாளர்களால் அந்த ஆலயம் கட்டப்பட்டது.[5]
இந்த ஆலயம் 2011-இல் மலேசியத் திரைப்படமான ’ஓம்பாக் ரிண்டு’ (Ombak Rindu) எனும் திரைப்படத்தில் இடம்பெற்று உள்ளது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.