அலாவுதின் பாமன் சா (r. 3 ஆகத்து 1347 - 1358) என்பவரின், இயற்பெயர் சாபர் கான் (Zafar Khan) ஆகும். இவர் ஆப்கானின் 34 மாகாணங்களில் ஒன்றான, பாதாக்சானின்(Badakhshan) வழிவந்தவர்.இவர் ஈரானின்[1] பாரசீக மொழி பேசும் மக்களான, தத்சிக்(TĀDJĪK)[2] பரம்பரையைச் சார்ந்தவர் என வரலாற்று ஆய்வுகளால் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன் இவர்,பாரசீக அரசரான பாமனின் வழித்தோன்றல் என கருதப்பட்டார்.[3]

Thumb
பாமினி சுல்தானம்
Thumb
அலாவுதின் பாமனின் நாணயம்

புரட்சியும், ஆட்சியும்

தில்லி சுல்தானத்தினை, முகம்மது பின் துக்ளக் ஆண்ட காலத்தில், புரட்சி செய்தவரான நசிருதின் இசுமாயில் சா (Nazir uddin Ismail Shah), தக்காணத்தின் ஆளுநராக இருந்த சாபர் கானின் புரட்சிக்கு ஆதரவாக இருந்தார்.அதன்பின்னர் சாபர்கானுக்கு, அலாவுதின் பாமன் சா (Abu'l Muzaffar Ala-ud-Din Hassan Bahman Shah) என்ற பட்டப்பெயரினைக் கொடுத்து, பாமினிச் சுல்தானத்தை நிறுவ பேருதவிப் புரிந்தார். அலாவுதின் பாமனும், துக்ளக்கின் ஆட்சிப் பகுதியான தக்காணத்தில் தொடர்ந்து புரட்சி செய்து, பாமினி சுல்தானத்தை, 3 ஆகத்து 1347 ஆம் ஆண்டு நிறுவினார்.[4][5]

தனது சுல்தானத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றினையும் நன்கு கவனித்து ஆட்சி செய்ய ஆளுநர்களை நியமித்தார்.[6][7] தனது காலத்தில் விசயநகரத்துடன் பல போர்கள் செய்தார். இவருக்குப் பிறகு இவரது மகனான, முதலாம் முகம்மது சா அரியணை ஏறினார்.[7]

மேற்கோள்கள்

இதையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.