அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது.[1] பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.

வாழ்த்துரை

இந்நூலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகள் மற்றும் வானதி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ஏ. திருநாவுக்கரசு ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம் பெற்றிருக்கின்றன. கட்டுரைகளின் இடையிடையே ஓவியர் சில்பி அவர்களின் அழகிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது.
"அர்த்தமுள்ள இந்து மதம்" என்ற இந்த நூல் எழுதப்பட்டதன் நோக்கம் பற்றிய கவிஞரின் 22/08/1972 நாளிட்ட கடிதத்தினை தொடர்ந்து முதல் பாகத்தின் முதல் கட்டுரை தொடங்குகிறது.

பாகம் 1

பாகம் 1ல் உள்ள கட்டுரைகளின் தலைப்புகள்:
1. உறவு
2. ஆசை
3. துன்பம் ஒரு சோதனை
4. பாவமாம், புண்ணியமாம்
5. மறுபடியும் பாவம் - புண்ணியம்
6. புண்ணியம் திரும்ப வரும்
7. விதிப் படி பயணம்
8. ஆணவம்
9. தாய் - ஒரு விளக்கம்
10. மங்கல வழக்குகள்
11. கல்லானாலும் ... புல்லானாலும் ...
12. நல்ல மனைவி
13. நல்ல நண்பன்
14. கீதையில் மனித மனம்
15. உயர்ந்தோர் மரணம்
16. கண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும்
17. பூர்வ ஜென்மம்
18. பிற மதங்கள்
19. சமதர்மம்
20. குட்டி தேவதைகள்
21. உலவும் ஆவிகள்
22. சோதனையும் வேதனையும்
23. ஒரு கடிதமும் பதிலும்
24. பாவிகளே பிரார்த்தியுங்கள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.