அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம்
அரக்கோணம்- செங்கல்பட்டு பாதை: இது தினமும் காலை, மாலை என இரு வேளை டீசல் என்ஜின் மூலம் 63 கிமீ தூரம / From Wikipedia, the free encyclopedia
அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Arakkonam Junction railway station, நிலையக் குறியீடு:AJJ) என்பது தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரில் அமைந்துள்ள, ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னிந்தியாவின் முதல் தொடருந்து பாதையில் அமைந்துள்ள, இந்தியாவின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் மும்பை - சென்னை வழித்தடத்தில், குண்டக்கல் - சென்னை எழும்பூர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இங்கு அதிவிரைவு இரயில்களைத் தவிர, அனைத்து இரயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து சென்னைக்கு புறநகர் இரயில்களும் இயக்கப்படுகின்றன.
அரக்கோணம் சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | அரக்கோணம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13.08191°N 79.66845°E / 13.08191; 79.66845 | ||||
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | எம். ஜி. ஆர். சென்னை சென்ட்ரல் - மும்பை வழித்தடம் எம். ஜி. ஆர். சென்னை சென்ட்ரல் - பெங்களூரு நகரம் வழித்தடம் அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடம் அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடம் | ||||
நடைமேடை | 8 | ||||
இருப்புப் பாதைகள் | 12 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | AJJ | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இது சென்னை - பெங்களூரு - கோயம்புத்தூர், திருப்பதி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை நாளொன்றுக்கு நூறுக்கும் அதிகமான இரயில்கள் கடந்து செல்கின்றன.
இது எட்டு நடைமேடைகளைக் கொண்டது. மூன்றாம், நான்காம் நடைமேடைகளை சென்னைப் புறநகர் இரயில்களில் செல்வோர் பயன்படுத்துகின்றனர். முதலாம், இரண்டாம் நடைமேடைகளை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.