அம்மாரா பிரதேசம்
எத்தியோப்பிய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
அம்மாரா பிரதேசம் (Amhara Region), கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்த ஒரு பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் பாகிர் தார் நகரம் ஆகும். இதனருகே திக்ரே பிரதேசம் அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்க அம்மாரா இன பழங்குடி மக்களின் தாயகம் ஆகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் அமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் உள்ள தானா ஏரி, நைல் நதிக்கு நீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் தேசியப் பூங்கா அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் அம்மாரா பிரதேசம் አማራ ክልል, நாடு ...
அம்மாரா பிரதேசம்
አማራ ክልል | |
---|---|
மாநிலம் | |
எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அம்மாரா பிரதேசத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°39′39″N 37°57′28″E | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | பாகிர் தார் |
அரசு | |
• ஆளுநர் | யிலிக்கல் கெபெல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 154,708.96 km2 (59,733.46 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3 |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 2,00,18,988[1] |
• தரவரிசை | 2 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அம்காரியம் |
• பிற மொழிகள் | ஒரோமோ, அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல் |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-AM |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.464[2] low • 9th of 11 |
மூடு
1,54,709 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அம்மார பிரதேசத்தின் மக்கள் தொகை 2,00,18,988 ஆக உள்ளது. இப்பிரதேசத்தில் அம்காரியம் உள்ளிட்ட அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல், ஒரோமோ மொழிகள் பேசப்படுகிறது.