அபு மலை
From Wikipedia, the free encyclopedia
அபு மலை (Mount Abu) என்பது இந்தியாவின் மேற்கில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள உயரமான சிகரமாகும். இது சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மவுண்ட் அபு பலன்பூருக்கு (குஜராத்) 58 கிமீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை 22 கிமீ நீளமும் 9 கிமீ அகலமும் கொண்ட தனிச்சிறப்புமிக்க பீடபூமியை உருவாக்குகிறது. இம்மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரம், குரு ஷிங்கார் ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 1722 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரமே ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் நீர் வீழ்ச்சிகளுக்கும் பசுமைமாறாக் காடுகளுக்கும் மூலமாக அமைந்துள்ளதால், இது பாலைவனச்சோலை என அழைக்கப்படுகிறது. மவுண்ட் அபுவின் பழைய பெயர் "அற்புதாஞ்சல் " ஆகும்
விரைவான உண்மைகள் அற்புதா மலை Arbuda Mountains, உயர்ந்த புள்ளி ...
அற்புதா மலை Arbuda Mountains | |
---|---|
ஆராவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த இடமான குரு ஷிஹார் என்ற இடத்தில் இருந்து அபு மலைப்பகுதியின் தோற்றம். | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | குரு சிகரம், ராஜஸ்தான் |
உயரம் | 1,722 m (5,650 அடி) |
ஆள்கூறு | 24°39′55″N 72°46′55″E |
பரிமாணங்கள் | |
நீளம் | 30 km (19 mi) |
புவியியல் | |
நாடு | இந்தியா |
நிலவியல் | |
பாறையின் வயது | Precambrian |
மூடு