அசகான்
From Wikipedia, the free encyclopedia
அசகான் (மலாய்; ஆங்கிலம்: Asahan, சீனம்: 刨花), மலேசியா, மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியாவில் புகழ்பெற்ற குனோங் லேடாங் மலை, இந்த நகருக்கு அருகாமையில் உள்ளது. ஜாசின் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ஜொகூர், தங்காக் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்து இருக்கும் இந்த நகரம், மலாக்கா - ஜொகூர் மாநிலங்களைப் பிரிக்கும் ஓர் எல்லை நகரமாகும்.
விரைவான உண்மைகள் அசகான், நாடு ...
அசகான் | |
---|---|
Asahan | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°23′33″N 102°32′41″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ஜாசின் |
முக்கிம் | சபாவ் |
உருவாக்கம் | 1910 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | www |
மூடு
இந்த நகரைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள், செம்பனைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள் இருக்கின்றன. அண்மைய காலங்களில் அந்தத் தோட்டப் பகுதிகளில் மிகுதியான நில மேம்பாட்டுத் திட்டங்கள், வீடமைப்புத் திட்டங்கள், தொழில்துறைத் திட்டங்கள் உருவாக்கம் பெற்றன. தோட்டப் புறங்களில் வாழ்ந்தவர்கள் பெரிய நகரங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். அசகான் நகரம் ஒரு சுற்றுலா மையமாக மாறி வருகிறது.[1]