அக்தாலைட்டு
ஐதராக்சைடு கனிமம் / From Wikipedia, the free encyclopedia
அக்தாலைட்டு (Akdalaite) என்பது கசகசுதான் நாட்டில் காணப்படும் ஓர் அரிய கனிமம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு 5Al2O3•H2O ஆகும்[1]. முன்னதாக இவ்வாய்ப்பாடு 4Al2O3•H2O. ஆக இருக்கும் என நம்பப்பட்டது. எனவே இது ஒரு செயற்கையாக உற்பத்தி செய்யக்கூடிய டோடைட்டு கட்டத்திற்கு சம்மானதாகக் கருதப்படுகிறது. படிக அமைப்பு மற்றும் நிறமாலை பற்றிய ஆய்வுகள் இக்கனிமத்தை ஓர் அலுமினிய ஆக்சைடு ஐதராக்சைடு எனக் காட்டுகின்றன[2].