Map Graph

பிஜ்பெஹாரா

பிஜ்பெஹாரா (Bijbehara) என்பது இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், பேரூராட்சியுமாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை -1ஏ இல் அமைந்துள்ளது. சினார் மரங்களுக்கு பெயர் பெற்ற இரண்டு சினார் தோட்டங்கள் இருப்பதால் பிஜ்பெஹாரா நகரம் "சினார் நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. பிஜ்பெஹாரா இப்பகுதியில் பழமையான சினார் மரத்தின் தாயகமாகும். ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான சிறிநகரிலிருந்து 45 கிமீ தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Bijbehara.jpgபடிமம்:India_Jammu_and_Kashmir_Union_Territory_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Apples_of_tribjee_arwani,_Bijbehara_4.jpg