From Wikipedia, the free encyclopedia
பிஜ்பெஹாரா (Bijbehara) என்பது இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், பேரூராட்சியுமாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை -1ஏ (பழைய நெடுஞ்சாலை) இல் அமைந்துள்ளது. சினார் மரங்களுக்கு பெயர் பெற்ற இரண்டு சினார் தோட்டங்கள் (பாத்ஷாஹி பாக் மற்றும் தாராஷுகோ தோட்டம்) இருப்பதால் பிஜ்பெஹாரா நகரம் "சினார் நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. பிஜ்பெஹாரா இப்பகுதியில் பழமையான சினார் மரத்தின் தாயகமாகும். ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான சிறிநகரிலிருந்து 45 கிமீ (28 மைல்) தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பிஜ்பெஹாரா
விஜிப்ரோர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 33.80°N 75.10°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | அனந்த்நாக் |
ஏற்றம் | 1,591 m (5,220 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 22,789 - தகியா பால் மற்றும் காட் ஹன்ஜிபோரா தவிர |
மொழிகள் | |
• அலுவல் | காஷ்மீரி, உருது, இந்தி, தோக்ரி, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | ஜேகே03 |
பிஜ்பெஹாரா அல்லது விஜ்போர் அல்லது விஜ்ப்ரோர் என்ற சொல் விஜயேசுவர் என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இது இந்துக் கடவுளான சிவன் விஜயேசுவரராக குடிகொண்டிருக்கும் பழங்கால தளமாகும்.[3]
பிஜ்பெஹாரா 33.80 ° வடக்கிலும் 75.10 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[4] இது சராசரியாக 1,591 மீட்டர் (5,223 அடி) உயரத்திலுள்ளது.
மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களில் ஒன்றான பிஜ்பெஹாரா, மாவட்ட தலைமையகத்தின் வடக்கே ஜீலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, இது உள்நாட்டில் "வேத்" என்று பிரபலமாக அறியப்படுகிறது. பிஜ்பெஹாரா அனந்தநாக் நகரிலிருந்து நான்கு மைல் வடக்கே அமைந்துள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 22,789 (12,057 ஆண்கள் மற்றும் 10,732 பெண்கள்) ஆகும்.[5] பிஜ்பெஹாராவின் மொத்த மக்கள்தொகையில் 0–6 வயதுடைய குழந்தைகள் 14.97% (3,411).
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.