Map Graph

பழுப்பு நாய் விவகாரம்

பழுப்பு நாய் விவகாரம் என்பது 1903 முதல் 1910 வரை பிரிட்டனில் பரபரப்பாகப் பேசப்பட்ட உடற்கூறாய்வு பற்றிய அரசியல் சர்ச்சையாகும். இலண்டன் பல்கலைக்கழக மருத்துவ விரிவுரைகளில் ஸ்வீடன் நாட்டுப் பெண்ணியவாதிகளின் இரகசியமாக ஊடுருவிய செயல், மருத்துவ மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சண்டை மூண்ட நிகழ்வுகள், நாய் சிலை ஒன்றுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்ட நிகழ்வு, பிரிட்டனின் அரச நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு போடப்பட்ட நிகழ்வு, அறிவியல் பரிசோதனைகளில் விலங்குகளைப் பயன்படுத்துவதைக் குறித்து விசாரிக்க இராயல் ஆணையம் நிறுவப்பட்ட நிகழ்வு என பலதரப்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது. நாட்டையே பிளவுபடுத்திய இந்த விவகாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்காக மாறியது.

Read article
படிமம்:Brown_Dog_statue_by_Joseph_Whitehead,_Battersea,_London.jpgபடிமம்:Brown_Dog_-_Battersea_Park_-_2008-04-09.jpg