From Wikipedia, the free encyclopedia
ஹோலிகா தகனம் அல்லது ஹோலிகா எரிப்பு (Holika Dahan) என்பது ஹோலிப் பண்டிகைக்கு முதல் நாள் மாலை கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையாகும். இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இந்நிகழ்ச்சியின் அடையாளமாக ஹோலிகா தகனம் கொண்டாடப்படுகிறது.
ஹோலிகா தகனம் | |
---|---|
ஹோலிகா சொக்கப்பனை-உதயப்பூர், இராசத்தான் | |
வகை | இந்துப் பண்டிகை |
கொண்டாட்டங்கள் | ஹோலிகா தகனத்தன்று: தீ எரித்தல் ஹோலியன்று: பிறர்மீது வண்ணப்பொடி பூசுதல்; பண்டிகைச் சிறப்பு உணவுகள் |
தொடக்கம் | பங்குனி மாத முழுநிலவு நாள் |
நாள் | பிப்ரவரி-மார்ச் |
தொடர்புடையன | ஹோலி |
பிரகலாதன் கதையோடு இணைந்த பல நிகழ்வுகள் இருந்தாலும் ஹோலிகாவை எரிப்பதுதான் ஹோலியுடன் இணைக்கப்படுகிறது. ஹோலிக்கு முதல் நாள் இரவில் கொண்டாடப்படும் தீமூட்டல் மூலம் ஹோலிகா எரிக்கப்படுவதாகக் கொள்ளப்படுகிறது. ஹோலிகா தகனத்திற்குப் பின்னணியில் உள்ள பிரகலாதன் கதை, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையால் ஒருவருக்கு நேரும் கேடுகளை நிச்சயமாக வெல்ல முடியும் என்பதை வலியுறுத்தும்வண்ணம் அமைந்துள்ளது.
வட இந்தியா, நேபாளம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் ஹோலி நாளுக்கு முந்தைய இரவில் சிதைமூட்டி எரிக்கப்படுகிறது.[1] இளைஞர்கள் பலவிதமான பொருட்களை விளையாட்டாகத் திருடிவந்து ஹோலிகா சிதையிலிடுவர். இந்தியாவின் சில பகுதிகளில் இந்நாள் ”ஹோலிகா” என்றும் அழைக்கப்படுகிறது.
பண்டிகைக்குப் பல நாட்கள் முன்பிருந்தே பூங்காக்கள், சமுதாயக்கூடங்கள், கோவில்களுக்கு அண்மைப்பகுதிகள் மற்றும் திறந்தவெளிகளில் ஹோலிகா தகனத்திற்குச் சிதை தயாரிக்கத் தேவையான எரிபொருட்களைச் சேகரிக்கத் தொடங்குகின்றனர். சிதையின் உச்சியில் பிரகலாதனைத் தந்திரமாக எரித்துவிடத் திட்டமிட்ட ஹோலிகாவைக் குறிக்கும் உருவபொம்மை உச்சியில் வைக்கப்படுகிறது. வீட்டினுள் மக்கள் வண்ணப்பொடிகள், குடிபானங்கள் மற்றும் பண்டிகைக்கால உணவுவகைகள் வீடுகளில் தயாரித்தோ அல்லது சேகரித்தோ வைக்கப்படுகின்றன.
ஹோலிக்கு முதல் நாள் மாலையில் சூரிய மறைவின்போது அல்லது மறைவுக்குப்பின் தயார்செய்து வைக்கப்பட்டிருக்கும் சிதையில் தீ மூட்டப்படுகிறது. தீயவற்றை நல்லவை வெல்லும் என்ற கருத்தின் குறியீடாக இச்சடங்கு அமைகிறது. மக்கள் தீயைச் சுற்றி பாடியும் ஆடியும் மகிழ்வர். ஹோலிகா தகனத்திற்கு அடுத்த நாள் வண்ணத் திருவிழாவான ஹோலி கொண்டாடி மகிழப்படுகிறது.
ஹோலி கொண்டாடப்படுவதற்கான புராணக்காரணமாக ஹோலிகா தகனம் உள்ளது. ஹோலிகா எரிந்து போனதற்கு பலவிதமான காரணங்கள் நிலவுகின்றன. அவற்றுள் சில:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.