From Wikipedia, the free encyclopedia
வில்லியம் பிளேக் (William Blake, 28 நவம்பர் 1757 – 12 ஆகத்து 1827) ஓர் ஆங்கிலக் கவிஞரும், ஓவியரும், அச்சு உருவாக்குநரும் ஆவார். வாழும்போது பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத பிளேக் தற்போது புனைவியம் மற்றும் காட்சிக் கலை வரலாற்றில் ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார். இவரது காட்சி கலைத்திறன் பற்றி 21 ஆம் நூற்றாண்டின் விமர்சகர் ஜொனாதன் ஜோன்ஸ் இவரை "பிரிட்டன் இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த கலைஞர்" என்று அறிவிக்க வழிவகுத்தது.[2] 2002 ஆம் ஆண்டில், பிபிசியின் 100 சிறந்த பிரித்தானிய நபர்களுக்கான வாக்கெடுப்பில் பிளேக் 38வது இடத்தைப் பெற்றார்.[3] ஃபெல்பாமில் கழித்த மூன்று ஆண்டுகள் தவிர, தனது வாழ்நாள் முழுவதும் இலண்டனில் வாழ்ந்தபோது, பலதரப்பட்ட மற்றும் குறியீட்டுச் செழுமையான படைப்புகளின் தொகுப்பை உருவாக்கினார், இது கற்பனையை "கடவுளின் உடல்" என்று கூறியது. [4]
வில்லியம் பிளேக் William Blake | |
---|---|
தாமசு பிலிப்சு 1807 இல் வரைந்த ஓவியம் | |
பிறப்பு | சோகோ, இலண்டன், இங்கிலாந்து | 28 நவம்பர் 1757
இறப்பு | 12 ஆகத்து 1827 69) சாரிங்கு கிராசு, இலண்டன்[1] | (அகவை
தொழில் |
|
கல்வி | ராயல் கலைக் கழகம் |
வகை | தொலைநோக்கு, கவிதை |
இலக்கிய இயக்கம் | புனைவியம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அப்பாவித்தனம் மற்றும் அனுபவத்தின் பாடல்கள், சொர்க்கம் மற்றும் நரகத்தின் திருமணம், நான்கு சோவாக்கள் |
துணைவர் | கேத்தரின் பவுச்சர் (தி. 1782) |
கையொப்பம் | |
பிளேக் தனது தனித்துவக் கருத்துக்களுக்காக சமகாலத்தவர்களால் பித்து பிடித்தவராகக் கருதப்பட்டாலும், பின்னர் வந்த விமர்சகர்களால் அவரது வெளிப்பாடு மற்றும் படைப்பாற்றல் மற்றும் அவரது படைப்புகளில் உள்ள தத்துவ மற்றும் உள்நோக்கங்களுக்காக மிகவும் மதிக்கப்பட்டார். அவரது ஓவியங்கள் மற்றும் கவிதைகள் புனைவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[5] இவரது படைப்புகளின் மூலம், அவர் "புனைவியம் மற்றும் தேசியவாதம் ஆகிய இரண்டின் ஆரம்பகால ஆதரவாளர்களில் முக்கியமானவர்" என்று கருதப்படுகிறார்.[6] இங்கிலாந்து திருச்சபைக்கு(உண்மையில், ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் அனைத்து வடிவங்களுக்கும்) பகையுணர்வு கொண்ட நபராக இருந்தார். பிரெஞ்சு மற்றும் அமெரிக்க புரட்சிகளின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்கள்களால் ஈர்க்கப்பட்டார்.[7] [8] அரசியல் நம்பிக்கைகள் பலவற்றை நிராகரித்த போதிலும், அரசியல் ஆர்வலர் தாமஸ் பெயினுடன் இணக்கமான உறவைப் பேணி வந்தார்; இமானுவேல் சுவீடன்போர்க் போன்ற சிந்தனையாளர்களாலும் ஈர்க்கப்பட்டார்.[9] பல சிந்தனையாளர்களால் ஈர்க்கப்பட்டாலும் இவரது படைப்புகள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் அறிஞர் வில்லியம் மைக்கேல் ரோசெட்டி இவரை ஒரு "புகழ்பெற்ற அறிவுமேதை",[10] மற்றும் "சமகாலத்தவர்களுடன் வகைப்படுத்தப்படாத அல்லது அறியப்பட்ட அல்லது தோன்றலர்களால் மாற்றப்படாத ஒரு மனிதர்" என்று வகைப்படுத்தினார்.[11]
வில்லியம் பிளேக் 1757 நவம்பர் 28 அன்று இலண்டனில் உள்ள சோகோவில் பிறந்தார். இவர் ஏழு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாவார்.[13][14] அவர்களில் இருவர் குழந்தை பருவத்திலேயே இறந்தனர். பிளேக்கின் தந்தை, ஜேம்ஸ், ஒரு பின்னலாடை வணிகர் ஆவார். [14] அவர் அயர்லாந்தில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.[15] பிளேக்ஸ் ஆங்கிலேய எதிர்ப்பாளர்களாக இருந்தாலும்,[16] வில்லியம் டிசம்பர் 11 அன்று லண்டனில் உள்ள பிக்காடில்லியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.[17] விவிலியம், பிளேக்கின் ஆரம்பகால வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் அவரது வாழ்நாள் முழுவதும் உத்வேகத்தின் ஆதாரமாக இருந்தது.
1781 ஆம் ஆண்டில் பிளேக் கேத்தரின் பவுச்சரைச் சந்தித்தார்.[18] 1782 ஆகஸ்ட் 18 அன்று பேட்டர்சீயில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் பிளேக் கேத்தரீனை திருமணம் செய்து கொண்டார். கல்வியறிவற்ற, கேத்தரின் தனது திருமண ஒப்பந்தத்தில் X உடன் கையெழுத்திட்டார். அசல் திருமணச் சான்றிதழை தேவாலயத்தில் காணலாம்.[19]
1783 ஆம் ஆண்டில், பிளேக்கின் முதல் கவிதைத் தொகுப்பு, பொயடிக்கல் ஸ்கெட்சஸ் அச்சிடப்பட்டது.[20] 1784 இல், தந்தையின் மரணத்திற்குப் பிறகு, முன்னாள் சக பயிற்சியாளர் ஜேம்ஸ் பார்க்கருய்டன் இணைந்து ஓர் அச்சு கடையைத் திறந்தனர். அவர்கள் வெளியீட்டாளர் ஜோசப் ஜான்சனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.[21] ஜான்சனின் வீடு அந்த நேரத்தில் இறையியலாளர் மற்றும் விஞ்ஞானி ஜோசப் பிரீஸ்ட்லி ; தத்துவஞானி ரிச்சர்ட் பிரைஸ் ; கலைஞர் ஜான் ஹென்றி ஃபுசெலி;[22] ஆரம்பகால பெண்ணியவாதி மேரி உல்சுடன் கிராஃப்ட் ; மற்றும் ஆங்கில-அமெரிக்க புரட்சியாளர் தாமஸ் பெயின் . வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் வில்லியம் காட்வின் ஆகிய சில முன்னணி ஆங்கில அறிவார்ந்த எதிர்ப்பாளர்களின் சந்திப்பு இடமாக இருந்தது:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.