From Wikipedia, the free encyclopedia
வியட்நாமின் ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் எதிர்பார்ப்பு ஆயுள் 2000 முதல் 2012 வரையிலான காலத்தில் இரண்டு ஆண்டுகள் கூடியுள்ளது.[1] இது உலகளவிலான இதே காலகட்டச் சராசரி எதிர்பார்ப்பு ஆயுளில் அரைமடங்கு ஆகும்.[1]
மாகாணங்களில் ஊட்டக் குறைபாடு இன்னமும் நிலவுகிறது. எதிர்பார்ப்பு ஆயுளும் குழந்தையிறப்பும் தேக்கத்தில் உள்ளன. 2001 இல் அரசின் நலவாழ்வுக்கான செலவு, தொகு தன்னாட்டு விளைபொருளில் (தொ. த. வி) 0.9% அளவாகவே உள்ளது. நலவாழ்வு செலவினத்தில் அரசு நல்கை 20% அளவுக்கே அமைகிறது. எஞ்சிய 80% செலவினம் தனியர்களின் சொந்த செலவில் இருந்தே பெறப்படுகிறது.[2]
2012 இல் மட்டும் நெஞ்சடைப்பால் 22% இறப்பு நேர்ந்துள்ளது. இதில் 7% இரப்புகள் இதயநோயால் ஏற்பட்டுள்ளது. 4.9% இறப்புகள் நீடித்த நுரையீரல் அடைப்பு நோயால் நிகழ்ந்துள்ளது.[1] புகையிலையும், இரத்தக்கொதிப்பும் இரண்டு மிகப்பெரிய பாதிப்புகளாக உள்ளது.[1]
கருத்தடை பரவலாக வழக்கில் உள்ளது; பெரும்பாலான பிரப்புகள் பயிற்சிபெற்ற நலவாழ்வு தரும் அமைப்புகளால் கவனிக்கப்படுகிறது. கருவுற்ற பெண்களில் 60% பேருக்கு பிறப்புமுன் அல்லது கருக்காலக் கவனிப்பு கிடைப்பதில்லை.[1]
வியட்நாம் இப்போது அனைவருக்குமான நலவாழ்வு இலக்கு நோக்கிப் போராடிவருகிறது. 2014 இன் இறுதியில் 71.6% அள்வுக்கான மக்கள்தொகை நலவாழ்வுக் காப்பீட்டுத் திட்ட்த்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இப்போது அரசு நல்கை 80% அளவுக்கு ஏழை மக்களுக்கும் 100% அளவுக்கு மிகவும் வாய்ப்புகளே இல்லாத பகுதிகளில் வாழும் சிறுபான்மை ஏழை மக்களுக்கும் 30% அளவுக்கு எளிய உழவர்களுக்கும் மீனவர்களுக்கும் கிடைக்கிறது.[3]
1980 களின் தொடக்கத்தில் இருந்து, நலவாழ்வுக் கவனிப்பின் தரம், பாதீட்டுக் குறைப்பாலும் மாகாணங்களுக்குப் பொறுப்பை ஒப்படைத்த்தாலும் கட்டணம் கட்டவேண்டி நேர்ந்த்தாலும் வீழ்ச்சிகாணத் தொடங்கியது . நிதி ஒதுக்கப்படாத்தால் நீர்வழங்கல், கழிவுநீர் அமைப்புகளின் திட்டமிட்ட தரங்கூட்டலை நிறைவேற்ற முடியவில்லை. இதன் விளைவால், ஏறத்தாழ அரைபகுதி மக்கள்தொகையினருக்கு பாதுகாப்பானதுய நீரை வழங்க இயலவில்லை. இந்த்த் தட்டுபாட்டால் மலேரியா, டெங்கு காய்ச்சல், என்புருக்கி நோய், காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவலாயின.நிதிவலப் போதாமையால் செவிலியர். ஆயாக்கள், மருத்துமனைப் படுக்கைகள் ஆகியவற்றில் தட்டுபாடு ஏற்பட்டது. 2000 இல் வியட்நாமில் 250,000 மருத்துவமனைப் படுக்கைகளே இருந்தன.அதாவது பட்டாயிரம் பேருக்குப் 14.8 படுக்கைகளே இருந்தன. உலக வங்கி கணக்கெடுப்பின்படி, இந்த விகிதம் ஆசிய நாடுகளிலேயே மிக்க் குறைவானதாகும்.[2] நலவாழ்வுக்கான அரசு செலவினம் குறைந்து பயனர்க் கட்டணத்தால் நிதிவலம் அமைந்த இந்த முறையால் ஊரக ஏழை மக்கள், நல்வாழ்வின் துய்ப்பைப் பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.[4]
அமெரிக்காவை எதிர்த்த வியட்நாம் போரின்போது இலையுதிர்க்கத் தூவிய ஆரஞ்சு முகனைப் பொருளான டையாக்சினால் பல உடல்நலக் குறைபாடுகள் உருவாகியதாகக் கருதப்படுகிறது. இலையுதிர்க்கப் பயன்படுத்திய இந்த டையாக்சின் இப்போது புற்றுநோயீனியாகக் கருதப்படுகிறது.[5] வியட்நாமில் இந்த வேதிப்பொருளைத் தூவிய பகுதிகளில், அது தூவாத பகுதிகளைவிட, குருதியிலும் முலைப்பாலிலும் டையாக்சின் அளவுகள் பேரளவில் வேறுபடுவது அளந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[5] இந்தப் புற்றுநோயீனி கழலை, நோயெதிர்ப்புக் குறைபாடு, இனப்பெருக்க, வளர்ச்சிக் குறைபாடுகள், நரம்புக் குறைபாடுகள், முதுகுத்தண்டுப் பிளவு உட்பட பல்வேறு பிறப்பு ஊனங்களை உருவாக்கவல்லது.[5][6] வியட்நாமில் இன்றும் மண்ணிலும் உணவிலும் காட்டுயிரிகளிலும் ஆரஞ்சு முகமைப்பொருள் இன்னமும் உள்ளதால் இது தொடர்ந்த இடர்க்காரணியகவே அமைகிறது.[6] மேலும், ஆரஞ்சு முகமைப்பொருளுக்கு ஆட்பட்டவரின் பல தலைமுறைகளில் தொடர்ந்து இவ்விளைவுகள் இன்னமும் தொடர்கின்றன. [6] 2007 இல் இருந்து, வியட்நாம் வல்லுனர்கள் இவ்வகை நலவாழ்வுக் குறைபாடுகளை ஈடுகட்ட வழிமுறைகளை வகுத்தளித்துள்ளனர்.[5]
கோவான் மி மருத்துவக் கூட்டிணையம் என்பது மிகப் பெரியதும் தரத்தில் பெயர்பெற்றதுமாகிய மருத்துவ ஏந்து வரிசை அமைப்புகளாகும். இதில் ஏழு மருத்துவ மனைகளும் ஒரு பன்மருத்துவ இல்லமும் வியட்நாமில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. ஒராண்டில் இங்கு 1.8 மில்லியன் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இதில் இதயவியல், என்பியல், கருவீனியல், மகப்பிறப்பியல், குழந்தைநலம், முதியோர் நோயியல், கண்மருத்துவம், கல்லீரலியல், வயிற்று நோயியல் ஆகிய சிறப்புத் துறைப்பிரிவுகள் அமைந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.