From Wikipedia, the free encyclopedia
லக்கூனா காயில் (Lacuna Coil) என்பது ஒரு இத்தாலிய மெட்டல் இசைக்குழு. இது 1994ஆம் ஆண்டில் துவங்கியது.[7][8]. முன்னர் இக்குழு சிலீப் ஆஃவ் ரைட் (Sleep of Right) என்றும் எத்ரியல் (Ethereal) என்னும் குழுக்களாக அறியப்பட்டு இருந்தன. இக்குழு கற்பனைக்கலையிலும் இசை வகையிலும் கோத்திக் (Gothic) என்னும் வகையைச் சேர்ந்தது. இவர்களின் இசை நடுத்தர விறுவிறுப்போடும் எடுப்பான கிட்டார் ஒலியோடும், ஆண்-பெண் குரல் வேறுபாடோடு சேர்ந்திசைக்கும் தன்மையோடு இனிய மெட்டுகள் அமைந்து இருப்பது சிறப்பு. இக்குழுவின் அண்மைக்கால இசைப்படைப்புகள் இன்னும் கீழதிர்வெண் சுரங்கள் கொண்டு தாழ்சுர ஒலிகள் (bass line) தூக்கலாகத் தெரியும் வகையில் கிட்டார் ஒலியுடன் பிணணந்து அமைந்துள்ளன.[9][10] . இக்குழுவின் 2006 ஆம் ஆண்டு வெளியீடாகிய கர்மாக்கோடு (Karmacode) பில்போர்டு 200 தர வசையில் 28 ஆக உயர்ந்து நின்றது. மிக அண்மைய சாலோ லைஃவ் (Shallow Life), பில்போர்டில் 16 ஆவதாகத் தொடங்கியது. இக்கோவை (album), இக்குழு கோத்திக் மெட்டல் வகையில் இருந்து நேரடியாக மாற்று மெட்டல் (alternative metal) வகை இசை வடிவிற்கு மாறுவதைக் காட்டுகின்றது]].[11][12][13]. ஆகத்து 2010 வரையிலும், லக்கூனா காயில் இசைவட்டுகள் 2 மில்லியன் விற்பனையாகியுளன.
லக்கூனா காயில் Lacuna Coil | |
---|---|
இரண்டு முன்னிலைப் பாடகர்கள், ஆண்டிரியா ஃவெர்ரோ (Andrea Ferro) வலப்புறமும், கிறித்தீனா இசுக்காபியாவும் (Cristina Scabbia) இடப்புறமும் நேரிடையாக நிகழ்த்துகிறார்கள். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | மிலான், இத்தாலி |
இசை வடிவங்கள் | கோத்திக்கு மெட்டல்[1][2][3][4] Alternative metal[5][6] |
இசைத்துறையில் | 1994 முதல் |
வெளியீட்டு நிறுவனங்கள் | செஞ்ச்சுரி மீடியா ரெக்கார்ட்ஃசு |
இணையதளம் | www.lacunacoil.it |
உறுப்பினர்கள் | கிறித்தீனா இசுக்காபியா (Cristina Scabbia) ஆண்டிரியா ஃவெர்ரோ (Andrea Ferro) கிறித்தியானோ மிகிலியோர் (Cristiano Migliore) மார்க்கோ பியாட்ஃசி (Marco Biazzi) Marco கோட்டி செலாட்டி (Coti Zelati) கிறித்தியானோ மோட்ஃசாட்டி (Cristiano Mozzati) |
முன்னாள் உறுப்பினர்கள் | ராஃவியேலே சகாரியா (Raffaele Zagaria) கிளாடியோ லியோ (Claudio Leo) லியனார்டோ ஃவோர்ட்டி (Leonardo Forti) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.