From Wikipedia, the free encyclopedia
ரோகிஞ்சா மக்கள் (Rohingya people, Ruáingga வங்காள மொழி: রোহিঙ্গা ரோகிங்கா) என்பவர்கள் மியான்மரில் இராக்கைன் மாநிலத்தின் வடக்கே வசிக்கும் இந்தோ-ஆரிய இனக்குழுவாகும். இவர்கள் ரோகிஞ்சா மொழியைப் பேசுகின்றனர்.[12][13] ரோகிஞ்சா மக்கள் இராக்கைன் மாநிலத்தின் பூர்வகுடிகள் என ரோகிஞ்சா மக்களும், சில ஆய்வாளர்களும் கூறும் அதே வேளையில், இவர்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் வங்காளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் எனவும்,[14][15][16] அல்லது குறைந்தது 1948 பர்மிய விடுதலைக்குப் பின்னரும், 1971 வங்கதேச விடுதலைப் போரின் பின்னரும் குடியேறியவர்கள்[17][18] எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(1,424,000–2,000,000[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மியான்மர் (அரக்கான்), வங்காளதேசம், மலேசியா, பாக்கித்தான், சவூதி அரேபியா, தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா | |
மியான்மர் | 735,000–800,000 |
சவூதி அரேபியா | 400,000[2] |
வங்காளதேசம் | 300,000 - 500,000[3][4][5] |
பாக்கித்தான் | 200,000[6][7][8] |
தாய்லாந்து | 100,000[9] |
மலேசியா | 40,070[10] |
[11] | |
மொழி(கள்) | |
ரோகிஞ்சா | |
சமயங்கள் | |
இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
வங்காளிகள் பர்மிய இந்தியர் |
மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோகிஞ்சா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் மனித உரிமைக்காக அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை என்ற பெயரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.[19] [20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.