ரேபரேலி மாவட்டம் (இந்தி: रायबरेली ज़िला, உருது: رائے بریلی ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ரேபரேலி நகரம் ஆகும். இம்மாவட்டம் லக்னௌ கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
Thumb
ரேபரேலிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம்
மாநிலம்உத்தரப்பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்லக்னௌ
தலைமையகம்ரேபரேலி
பரப்பு4,609 km2 (1,780 sq mi)
மக்கட்தொகை3,404,004 (2011)
மக்களவைத்தொகுதிகள்ரேபரேலி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
மூடு

பொருளாதாரம்

2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ரேபரேலி மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ரேபரேலி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,404,004.[2] இது தோராயமாக பனாமா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 97வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 739 inhabitants per square kilometre (1,910/sq mi).[2] மேலும் ரேபரேலி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.51%.[2] ரேபரேலி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ரேபரேலி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.04%.[2]

மொழிகள்

இம்மாவட்டத்தில் அவதி மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது. இம்மொழியை 38 மில்லியன் மக்கள் அவத் பகுதியில் பேசுகின்றனர்[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.