யோனி

types of sex From Wikipedia, the free encyclopedia

யோனி

யோனி (புணர்புழை) என்பது பாலூட்டிகளின் சதைப் பற்றுள்ள, மீட்சித்தன்மையுடைய பெண் பிறப்புறுப்புப் பாதையாகும். கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பெண்குறிக்கும் இடைப்பட்ட பாதையாகும். பொதுவாக வெளிப்புற யோனியானது கன்னிச்சவ்வு எனப்படும் யோனிச்சவ்வினால் பகுதியாக மூடப்பட்டிருக்கும். இதன் ஆழமான முடிவில் கருப்பையின் கழுத்துப்பகுதியான கருப்பை வாய் சற்றே புடைத்தபடி யோனிக்குள் காணப்படும். யோனியானது பாலுறவுவையும், பிறப்பையும் அனுமதிக்கிறது. மனிதர்களுக்கும் அவர்களோடு நெருங்கிய தொடர்புடைய முதனிகளுக்கும் மாதவிடாய் வெளியேற்றத்துக்கு வழியாக இருக்கிறது.

விரைவான உண்மைகள் யோனி, விளக்கங்கள் ...
யோனி
Thumb
பெண்ணினப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் யோனி.
Thumb
கருப்பைத் திறப்புடைய பெண்குறி
விளக்கங்கள்
முன்னோடிசிறுநீர்பிறப்புறுப்பு சைனஸ் மற்றும் paramesonephric குழாய்
தமனிகருப்பைத் தமனிக்கு உயர்ந்த பகுதி, யோனித் தமனிக்கு நடுத்தர மற்றும் தாழ்வான பகுதி
சிரைசிரைப்பின்னல், யோனி நாளம்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்யோனி
MeSHD014621
TA98A09.1.04.001
TA23523
FMA19949
உடற்கூற்றியல்
மூடு

பல்வேறு விலங்கினங்கள் இல்லாத (குறைந்துவரும்) நிலையிலும் யோனி பற்றிய ஆய்வுகளில், யோனி அமைந்துள்ள இடம், அமைப்பு, அளவு ஆகியவை இனத்திற்கு இனம் மாறுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாலூட்டிகளில் வழக்கமாக சிறுநீருக்கான திறப்பு ஒன்றும் பிறப்பிற்கான பாதையாக ஒன்றுமாகப் பெண்குறியில் இரண்டு திறப்புகள் உள்ளன. இது ஆண் பாலூட்டிகளுக்கு வேறுபடுகிறது. இனப்பெருக்கத்திற்கும், சிறுநீருக்கும் ஒரே திறப்புதான் உள்ளது. பெண் பாலூட்டிகளில் யோனித் திறப்பானது சிறுநீர்த் திறப்பினைவிட மிகவும் பெரிதாக உள்ளது. இவை இரண்டும் இதழ்போன்ற யோனியிதழால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நிலநீர் வாழிகள், ஊர்வன, பறவைகள், மோனோட்ரெம் எனப்படும் பாலூட்டிகள் ஆகியவற்றுக்கு சிறுநீர் வெளியேற்றம், இனப்பெருக்கம், இரைப்பைக்குடல் வழி ஆகிய அனைத்துக்கும் ஒரே எச்சத் துவாரமே காணப்படுகிறது.

மனிதப் பெண்கள், பிற பெண் பாலூட்டிகளில், பாலுறவுப் புணர்ச்சியின் போது அல்லது பிற பாலியல் செயல்பாடுகளின் போது, மென்மையாக ஊடுருவ இடமளிப்பதற்காக பாலுணர்வுத் தூண்டலின் காரணமாக யோனியில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இது யோனியின் உயவுத்தன்மையை அதிகரித்து உராய்வைக் குறைக்கிறது. யோனிச் சுவர் அமைப்பானது ஆண்குறிக்கு உராய்வை ஏற்படுத்தும்படி அமைந்துள்ளது. இந்த உராய்வானது கருத்தரித்தலுக்குத் தேவையான விந்து வெளியேற்றத்துக்கான தூண்டலை ஆண்குறிக்குத் தருகிறது. மகிழ்ச்சிக்காகவோ, பிணைப்பினாலோ பிறரோடு அதாவது எதிர்பால்சேர்க்கை அல்லது ஒத்த பாலினத்தவருடனும் பாலுறவு கொள்ளும் ஒரு பெண்ணின் பாலியல் நடத்தையானது பாலுறவு மூலம் பரவும் நோய்களைத் தோற்றுவிக்கிறது. பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பான பாலுறவு இதன் ஆபத்தைக் குறைக்கும். பாலியல் நோய்களல்லாத நோய்கள், நோய்த்தொற்றுகள் ஆகியவற்றாலும் யோனி பாதிக்கப்படலாம்.

யோனியும் பெண்குறியும் வழிவழியாகச் சமூகத்தில் வலுவான எதிர்வினைக் கருத்தைத் தூண்டியுள்ளது. மொழியில் தவறாகப் பயன்படுத்துதல், கலாச்சார அடக்குமுறை, பாலியல் விருப்பக் குறியீடு, ஆன்மிகம், மறுவாழ்வு போன்றவற்றுக்கான சின்னமாகப் இவைகளைப் பயன்படுத்தினர். பொதுவாக நடைமுறையில் யோனி எனும் சொல்லானது யோனியிதழ் அல்லது பெண்குறியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அகராதி மற்றும் உடற்கூற்றியல் வரையறைகளில் யோனி என்பது பிரத்யேகமாக பிறப்புறுப்பின் உள் அமைப்பையேக் குறிக்கிறது. பெண் பிறப்புறுப்பினைப் பற்றிய இந்த வேறுபாட்டினை அறிவது சுகாதார மேம்பாட்டிற்கு உதவியாக அமையும்.

கட்டமைப்பு

முழு உடற்கூறமைப்பு

Thumb
Pelvic anatomy including organs of the female reproductive system

மனித யோனியானது பெண்குறிமுதல் கருப்பை வாய் வரை நீடித்துள்ள மீள்தன்மையுள்ள தசை வழியாகும்.[1][2] யோனியின் திறப்பானது பிறப்புறுப்பு முக்கோணப்பகுதியில் அமைந்துள்ளது. பிறப்புறுப்பு முக்கோணம் என்பது மலவாய்க்கும் பெண்குறிக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறுநீரகத்திறப்புடன் பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.[3] யோனி வழியானது சிறுநீர்த் திறப்புக்குப் பின்னும் பெருங்குடல் கீழ்வாய்ப் பகுதிக்கு முன்னும் மேலும் கீழுமாய்ப் பின்னோக்கி அமைந்துள்ளது. மேற்புற யோனிக்கருகில் சுமார் 90 பாகைக் கோணத்தில், கருப்பை வாய்ப்பகுதியானது சற்று புடைத்தபடி காணப்படுகிறது.[4] யோனி மற்றும் பெண்குறி இரண்டும் இதழ்களால் பாதுகாக்கப்படுகிறது.[5] பாலியல் தூண்டுதல்கள் இல்லாத போது யோனியானது அதன் முன்சுவரும் பின் சுவரும் ஒட்டிய ஒரு சரிந்த குழாய் போலக் காணப்படுகிறது. அதன் பக்கவாட்டுச் சுவர்கள் குறிப்பாக பக்கவாட்டுச் சுவர்கள் மற்றெல்லாவற்றையும் விட கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக சரிந்த யோனியானது குறுக்குவாட்டில் ஆங்கில எழுத்தான வடிவில் காணப்படும்.[2][6] இதன் பின்னால் உள்யோனியானது கருப்பையினால் தனியாகப் பிரிக்கப்படுகிறது. நடுயோனியானது தளர்வான இணைக்கப்பட்ட திசுவாலும், கீழ்யோனியானது பெரியனியம் எனப்படும் பகுதியாலும் பிரிக்கப்படுகிறது.[7]

கருப்பையின் கருப்பைவாய்ப்பகுதியைச் சுற்றியுள்ள யோனிக்குழாய்ப் பகுதியானது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முன்புறம், பின்புறம், இடப்புறம், வலப்புறம் என நான்காக பிரிக்கப்படுகிறது. முன்பகுதியை விட பின்பகுதியானது ஆழமானதாகும்.[1][2][2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.