யோகக் கலையைப் பற்றிய இந்து நூல் From Wikipedia, the free encyclopedia
யோக-குண்டலினி உபநிடதம் (Yoga-kundalini Upanishad) ( சமசுகிருதம் : योगकुण उपनिषत ) [1] சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இது 20 யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[2] மேலும் கிருஷ்ண யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்ட 32 உபநிடதங்களில் ஒன்றாகும். [2] இராமனால் அனுமனுக்குக் கூறப்பட்ட முக்திகா நியதியில், இது 108 உபநிடதங்களின் தொகுப்பில் 86 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது..[3]
யோக-குண்டலினி உபநிடதம் | |
---|---|
Yoga-Kundalini Upanishad is a yoga text | |
தேவநாகரி | योगकुण्डलिनी |
உபநிடத வகை | Yoga |
தொடர்பான வேதம் | Krishna யசுர் வேதம் |
அத்தியாயங்கள் | 3 |
பாடல்களின் எண்ணிக்கை | 171 |
இது குண்டலினி யோகத்தின் விளக்கத்துடன் தொடர்புடைய மிகவும் குறிப்பிடத்தக்க உரையாகும்.[4] இது ஹத யோகம் மற்றும் லம்பிகா யோகத்தைப் பற்றி விவரிக்கிறது. கடைசி அத்தியாயம் முதன்மையாக சுய அறிவு, ஆன்மா, பிரம்மம் மற்றும் வாழும் விடுதலை பற்றிய தேடலைப் பற்றியது.[4] இது இந்து மதத்தின் சக்தி பாரம்பரியத் தாந்திரீகத்தைப் பற்றிய ஒரு முக்கியமான உரையாகும். மேலும் குண்டலினி யோகக் கலை பற்றிய மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.[5][6]
"மரத்தடிகளில் பற்றவைக்கும் நெருப்பு எரியாமல் எழுவது போல யோகப் பயிற்சி இல்லாமல், அறிவின் ஒளியை ஏற்றிவிட முடியாது" என உரை கூறுகிறது. [7] சித்தம், அல்லது மனம், சம்ஸ்காரங்கள் மற்றும் வசனங்களுக்கு (நடத்தை போக்குகள்) ஆதாரமாகவும், பிராணனின் விளைவுகளாகவும் உரையில் விளக்கப்பட்டுள்ளது.. பிராணனைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் யோகா நுட்பங்கள் உபநிடதத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.[4] இந்த நுட்பங்களில் மிதகாரம் (மிதமான, சமச்சீர் ஊட்டச்சத்து), ஆசனம், உள் சக்தியை எழுப்புதல் ஆகியவை யோகினியின் குண்டலினியைத் தூண்டுவதற்கான வழிமுறையாக வலியுறுத்தப்படுகின்றன.[8][9]
குண்டலினி,என்பதற்கு "ஒவ்வொரு நபரிடமும் இருக்கும் மறைந்திருக்கும் ஆன்மீக சக்தி" என ஜேம்ஸ் லோக்டெஃபெல்ட் விளக்கம் கூறுகிறார்.[10] இது தாந்தீர்கத்தில் ஒரு அடிப்படைக் கருத்தாகும். மேலும் ஒவ்வொரு நபரிடமும் பொதுவாக செயலற்ற நிலையில் இருக்கும் சக்தியின் ஒரு அம்சத்தைக் குறிக்கிறது.[10] குண்டலினி வார்த்தையின் அடிப்படை 'குண்டலம்' (சுருண்ட கயிறு). "யோக-குண்டலினி உபநிஷத்" என்ற தலைப்பு "குண்டலினி யோகத்தின் இரகசியக் கோட்பாடு" என்று பொருள்படும்.
யோக-குண்டலினி உபநிடதம் என்பது ஒரு பொதுவான சகாப்த உரை, இது யோகசூத்திரங்களுக்குப் பிறகு இயற்றப்பட்டது.[11] 11 ஆம் நூற்றாண்டின் யோகியான கோரக்நாத் போன்ற சித்த யோகிகளால் கற்பிக்கப்பட்ட யோக-குண்டலினி உரை, பல பிற்கால யோக உபநிடதங்களைப் போலவே, யோகக் கருத்துக்கள் மற்றும் முறைகளைக் கையாள்கிறது என்று பானர்ஜி கூறுகிறார். [12]
மொத்தம் 171 வசனங்களைக் கொண்ட மூன்று அத்தியாயங்களாகக் கட்டமைக்கப்பட்ட வசனத்தில் உரை அமைக்கப்பட்டுள்ளது. [13] முதல் அத்தியாயத்தில் 87 வசனங்கள் உள்ளன. மேலும் யோகப் பயிற்சி பற்றி விவாதிக்கிறது. [13] 49 வசனங்களைக் கொண்ட இரண்டாவது அத்தியாயம் கேகாரி (சமஸ்கிருதம்: खेचरि) அறிவைப் பற்றி விவாதிக்கிறது.[9] கடைசி அத்தியாயம் 35 வசனங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஆன்மா, பிரம்மம், தியானம் மற்றும் வாழும் விடுதலை பற்றி விவாதிக்கிறது.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.