வேதிச் சேர்மங்களின் குழு From Wikipedia, the free encyclopedia
மெத்திலமோனியம் ஆலைடுகள் (Methylammonium halide) என்பவை [CH3NH3]+X− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம ஆலைடுகளாகும், இங்குள்ள X என்பது மெத்திலாமோனியம் புளோரைடுக்கு F ஆகவும், மெத்திலமோனியம் குளோரைடுக்கு Cl ஆகவும், மெத்திலமோனியம் புரோமைடுக்கு Br ஆகவும் மெத்திலமோனியம் அயோடைடுக்கு I ஆகவும் குறியீடுகள் இடம்பெறும். பொதுவாக இவை வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் தூளாக காணப்படுகின்றன.
மெத்திலமோனியம் ஆலைடு உப்புகள் பெரோவ்சுஸ்கைட்டு சூரிய மின்கலங்களின் பகுதி கூறுகளாகும். இவை வணிகமயமாக்கலுக்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன.[1] அயோடைடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு அம்மோனியம் ஆலைடுகளின் அடிப்படையில் காந்த-ஒளியியல் தரவு சேமிப்பக கருத்துருக்கள் சோதிக்கப்படுகின்றன.[2]
மெத்திலமோனியம் ஆலைடு சேர்மங்கள் பொதுவாக சமமான அளவு மெத்திலமீனை பொருத்தமான ஆலைடு அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மெத்திலமோனியம் அயோடைடு 0 °C இல் மெத்திலமீனுடன் ஐதரயோடிக் அமிலத்தைச் சேர்த்து 120 நிமிடங்களுக்கு வினைபுரியச் செய்து 60 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆவியாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[3]
மெத்திலமோனியம் ஆலைடுகளின் படிகவியல் மிகவும் ஆய்வுக்கு உட்பட்டதாகும். இயே.எசு. எண்டிரிக்சு 1928 ஆம் ஆண்டில் இவை பற்றிய ஆரம்பகால கட்டுரையை வெளியிட்டார்.[4] மெத்திலமோனியம் குளோரைடு மீண்டும் 1946 ஆம் ஆண்டிலும்[5] 1961 ஆம் ஆண்டில் மெத்திலமோனியம் புரோமைடும் ஆய்வு செய்யப்பட்டன.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.