From Wikipedia, the free encyclopedia
மார்கண்டேயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.[1]
நிலமகள் என்றென்றும் நிலைத்திருந்து அழுகிறாள் என்னும் கருத்தமைந்த இந்தப் பாடலைப் பாடிய புலவருக்கு மார்க்கண்டேயனார் என்று புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். பாடற்பொருளால் பெயரமைந்த புலவர் இவர்.
புராணக் கதையில் வரும் மார்கண்டேயன் சிவலிங்கத்தை அணைத்துத் தன் மார்பைக் கற்கண்டுபோல் இனிமை எய்தும் பேறு பெற்றவன்.
நிலமகளுக்கு விசும்புதான் முகம். ஞாயிறும் திங்களும் இரண்டு கண்கள். அவை இரண்டும் தன் வண்டிச் சக்கரத்தை விசும்பில் உருட்டுகின்றன.
காற்றோட இடமின்றிப் படைவெள்ளம் நெருங்கிப் போராடும் இடத்தில், வயிரக் குறுந்துகள் மாலையும், மணிமாலையும் அணிந்துகொண்டு பொன்போல் மிளிரும் தன் சக்கரத்தை உருட்டுகையில் தன்னை எதிர்த்து நிற்பார் யாரையும் காணாமல் தவித்த போர்வலிமை மிக்க வீரன் - இப்படிப் பலர் வாழ்ந்து மாண்டனர். அனால் உலகம் அழியவில்லை.
மக்கள் வாழக் வளி என்னும் மூச்சுக்காற்று வேண்டும். விசும்பில் மூச்சுக்காற்று இல்லை. நிலமகளின் கண்களாகிய இரு சுடர்கள் வளி இல்லாத அந்த வெளியில் தன் வண்டியை உருட்டுகின்றன.
விசும்பில் நாம் மூச்சு விடுவதற்கு எற்ற காற்று இல்லை என்பதை அன்றே அறிந்திருந்தனர்.
தன்னுடைய உடல்நலத்தை விலைக்கு விற்கும் பெண் இவள். தன்னிடம் வந்த எந்த வீரன் இறந்தாலும் அவனுக்காகக் கண்ணீர் விட்டுக்கொண்டு அடுத்தனுக்காக மகிழ்வோடு வாழ்பவள். இந்த விலைநலப் பெண்டு போல நிலமகள் வாழ்கிறாளாம்.
Seamless Wikipedia browsing. On steroids.