From Wikipedia, the free encyclopedia
மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022
மலேசிய அரசியலமைப்பு திருத்தம் 2022 | |
---|---|
கூட்டரசு அரசியலமைப்பை திருத்துவதற்கான ஒரு சட்டம் (An Act to amend the Federal Constitution) | |
சான்று | சட்டம் A1642 Act A1642 |
நிலப்பரப்பு எல்லை | மலேசியா |
இயற்றியது | மக்களவை (மலேசியா) |
இயற்றப்பட்ட தேதி | 14 டிசம்பர் மாதம் 2021 |
இயற்றியது | மேலவை (மலேசியா) |
இயற்றப்பட்ட தேதி | 23 டிசம்பர் மாதம் 2021 |
சட்ட வரலாறு | |
சட்ட முன்வரைவு | அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2021 Constitution (Amendment) Bill 2021 |
அறிமுகப்படுத்தியது | வான் சுனைடி துவாங்கு ஜாபார் |
சுருக்கம் | |
மலேசியா ஒப்பந்தத்தின் படி சபா மற்றும் சரவாக் அரசியலமைப்புத் தகுதியை மீண்டும் நிலைநிறுத்துவது |
மலேசிய அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2022 (ஆங்கிலம்: Constitution of Malaysia (Amendment) Act 2022; மலாய்: Perlembagaan Persekutuan Malaysia (Pindaan) 2022; சீனம்: 2022 年马来西亚联邦宪法修正案); என்பது சபா, சரவாக் மாநிலங்களைத் தீபகற்ப மலேசியாவுடன் சமமான பங்காளிகளாக நிலைநிறுத்த (To restore Sabah and Sarawak as equal partners to Malaya) இயற்றப்பட்ட சட்டத் திருத்தமாகும்.[1][2]
இந்தச் சட்டம் 1963-ஆம் ஆண்டின் மலேசிய ஒப்பந்தத்தை (Malaysia agreement of 1963) (MA63) முறையாகச் செயல் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தச் சட்டச் திருத்தம், 2021 டிசம்பர் 14-ஆம் தேதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (Dewan Rakyat) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.[3]
பின்னர் 2022 பிப்ரவரி 11-ஆம் தேதி, மலேசிய மாமன்னரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு (Royal Assent) இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.[4]
2019-ஆம் ஆண்டில், அப்போதைய பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணி அரசாங்கம்; மலேசிய அரசியலமைப்பில் (Constitution of Malaysia) இதே போன்ற ஒரு திருத்தம் செய்யப் படுவதற்கு முன்மொழிவு செய்தது.
அந்த முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தால், சபா, சரவாக் மாநிலங்கள் மலேசியாவின் தொகுதிப் பிரதேசங்கள் என வரையறுக்கும் 1963-ஆம் ஆண்டின் மலேசிய ஒப்பந்தப் பதிவுகளின் 1 (2)-ஆவது பிரிவைத் திருத்தம் செய்ததாக அமைந்து இருக்கும். (The proposal would have amended Article 1(2) to restore its 1963 wording defining Sabah and Sarawak as constituent territories of Malaysia.)
மலேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த முன்மொழிவை ஆதரித்தாலும், அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான 2/3 பெரும்பான்மை (2/3rds majority required to pass a constitutional amendment) கிடைக்கவில்லை. அதனால் அந்தத் திருத்தம் (மசோதா) தோல்வி அடைந்தது.
பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்; இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2021 செப்டம்பர் 16-ஆம் தேதி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம் தொடர்பான சபா சரவாக் பிரச்சினைகள் (Issues relating to Sabah and Sarawak on Malaysia Agreement 1963); ஒரு சிறப்பு மன்றத்தின் மூலமாகக் கவனிக்கப்படும் என அறிவித்தார்.
அதன் பின்னர், சபா சரவாக் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அவற்றுக்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமை தாங்கினார். அந்தப் பேச்சுவார்த்தைகளில் சபா, சரவாக் முதலமைச்சர்கள் மற்றும் மலேசிய அமைச்சரவையைச் சேர்ந்த எட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து 2021 அக்டோபர் 19-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) மேக்சிமஸ் ஓங்கிலி (Maximus Ongkili) ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். 1963-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலேசிய ஒப்பந்தம் (Malaysia Agreement 1963); திருத்தம் செய்யப்படுவதற்கு சிறப்பு மன்றம் ஒப்புக் கொண்டால், மலேசிய அரசியலமைப்பின் 1(2) மற்றும் 160(2) சட்டப் பிரிவுகளின் (Articles 1(2) and 160(2) of the Federal Constitution); திருத்தம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் அறிவித்தார்.
2021 அக்டோபர் 19-ஆம் தேதி நடந்த அதே கூட்டத்தில், சபா மற்றும் சரவாக் மாநில அரசாங்கங்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமங்களை (Deep Fishing Licences) வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்க சிறப்பு மன்றம் ஒப்புக்கொண்டது. இதற்கு முன்னர், ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்குவதற்கு புத்ராஜெயா மத்திய அரசு சரவாக் மாநில அரசிற்கு தடை விதித்து இருந்தது. [5]
இறுதியாக 2021 நவம்பர் 3-ஆம் தேதி, பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்) வான் சுனைடி துவாங்கு ஜாபார் (Wan Junaidi bin Tuanku Jaafar) அவர்களால் அந்தச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.[6] அந்தச் சட்டத் திருத்தங்கள் நான்கு மாற்றங்களைக் கொண்டிருந்தன:[7]
2021 டிசம்பர் 14-ஆம் தேதி, 6 மணிநேர விவாதத்திற்குப் பிறகு, மலேசிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம்; 199 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.[9] இந்தச் சட்டம் 2022 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.[10]
2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றம் அதன் மாநில அரசியலமைப்பில் சில திருத்தங்களை நிறைவேற்றியது. சரவாக் முதலமைச்சர் (Chief Minister) எனும் மாநிலத்தின் அரசாங்கத் தலைவரின் பதவி; பிரதமர் (Premier of Sarawak) என மாற்றம் செய்யப்பட்டது.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.