மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி
From Wikipedia, the free encyclopedia
மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி (human chorionic gonadotropin; hCG) என்னும் இயக்குநீரானது கருவுற்றபின், சூலுற்ற முட்டையின் பகுதியான பல்கருமுதலுரு சூல்முகையினால் (syncytiotrophoblast) உருவாக்கப்படுவதாகும். இளம்கருவளர்முண்டானது (blastocyst) கருப்பையகத்திற்குள் பொருந்தியபின் பல்கருமுதலுரு சூல்முகையிலிருந்து சூல்வித்தகம் (நஞ்சுக்கொடி) உருவாகிறது[1][2]. சில புற்றுக் கட்டிகளும் இந்த இயக்குநீரை உருவாக்குகின்றன; எனவே, ஒரு நோயாளி கருவுறாமல் அதிக அளவு இயக்குநீரைக் கொண்டிருப்பது புற்று நோய்க்கான அறிகுறியாகக் கருததப்படலாம். என்றாலும், இத்தகு அதிகமான இயக்குநீர் உற்பத்தி கட்டி உருவாவதற்கான காரணமா அல்லது கட்டியின் விளைவா என்பது இதுவரைக் கண்டறியப்படவில்லை. மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கியைப் போன்ற இயக்குநீரான லூட்டினைசிங் இயக்குநீர் எல்லா வயது ஆண்களிலும், பெண்களிலும் பிட்யூட்டரி சுரப்பியில் உருவாகிறது[1][3]. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஓமியோபதி மற்றும் மருந்து சீட்டில்லாத மனிதக்கரு வெளியுறை கருவகவூக்கி இயக்குநீரைக் கொண்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது. இத்தகுப் பொருட்கள் மோசடியானவை, சட்டவிரோதமானவை என்றும் அறிவித்துள்ளது[4][5][6].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.