இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
மகேசு காலே (Mahesh Kale) (பிறப்பு 12 சனவரி 1976) இந்திய பாரம்பரிய இசைப் பாடகராவார். இந்துஸ்தானி இசை, அரைப் பாரம்பரியம், பக்தி பாடல்கள், சங்கீத நாடகம் போன்றவற்றில் தனது நிபுணத்துவத்திற்கு புகழ்பெற்றவர். கத்யார் கல்ஜாத் குஸ்லி என்ற படத்தில் பாடியதற்காக, சிறந்த ஆண் பின்னணி பாடகராக 63 வது தேசியத் திரைப்பட விருதை வென்ற இவர், புதிய தலைமுறையின் இந்தியப் பாரம்பரிய இசையின் முகமாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டார். இவர் பண்டிட் சிதேந்திர அபிசேகியின் சீடராவார்.
மகேசு காலே | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மகேசு காலே |
பிறப்பு | 12 சனவரி 1976 புனே, மகாராட்டிரம், இந்தியா |
பிறப்பிடம் | புனே, மகாராட்டிரம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, இந்துஸ்தானி இசை, அரை-பாரம்பரிய இசை, பக்தி பாடல்கள், சங்கீத நாடகம் |
தொழில்(கள்) | பாடகர், கலைஞர், இசை ஆசிரியர் |
இவர், இந்தியாவின் மகாராட்டிராவின் புனேவில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது ஆரம்பகால இசைக் கல்வியை தனது தாயார் திருமதி. மீனாள் காலேவிடம் பெற்றார். இந்திய பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் வீணா சகசுரபுத்தேவிடம் சீடராக இருந்தார்.
தனது 3வது வயதில் பிரம்மா சைதன்யா கோண்டவாலேகர் மகாராஜின் சமாதியில் (சன்னதி) தனது முதல் தனி நிகழ்ச்சியை வழங்கினார். பின்னர், புருசோத்தம் கங்குர்தேவிடம் கற்றுக்கொண்டார். புகழ்பெற்ற பண்டிட் சிதேந்திர அபிசேக்கியின் சீடராக 1991 இல் சேர்ந்தார். குருகுலம் போன்ற அமைப்பில் அவரது பயிற்சியின் கீழ், இவர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக தும்ரி, தாத்ரா, தப்பா, பஜனைகள் மற்றும் மராத்தி நாட்டிய சங்கீதம் ஆகியவற்றில் விரிவாக பயிற்சி பெற்றார். இந்தியா முழுவதிலும் உள்ள மதிப்புமிக்க இசை நிகழ்ச்சிகளில் தனது குருவுடன் சென்று கலந்து கொண்டார்.
புனே, சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்துடன் இணைந்த விசுவகர்மா தொழில்நுட்பக் கழகத்தில் மின்னணுவியலில் இளங்கலை பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் சாண்டா கிலாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். இவர் பூர்வா குஜார் என்பவரை 2005இல் மணந்தார். மேலும் இவர்கள் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இலாப நோக்கற்ற இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலை அறக்கட்டளையை] நடத்துகின்றனர். [1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.