பேரூர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பேரூர் (ஆங்கிலம்:Perur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் ஆறைநாடு என்னும் பகுதியில் இருந்தது. [3]இவ்வூரில் பேரூர் பட்டீசுவரர் கோயில் உள்ளது.
பேரூர் | |
ஆள்கூறு | 10°58′N 76°54′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 7,937 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 418 மீட்டர்கள் (1,371 அடி) |
இவ்வூரின் அமைவிடம் 10.97°N 76.9°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418 மீட்டர் (1371 அடி) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது[6]. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன[7].
இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.